புதன், 21 டிசம்பர், 2011

பேய்மழை! - காரஞ்சன்(சேஷ்)

                                                                    பேய்மழை!

                 சுட்டெரித்த        சூரியனால்             வற்றின              நீர்நிலைகள்!
                 கைவிரித்த          காவிரியால்          கருகின               பயிர்கள்!
                 கதிரவனுக்          கெதிராய்                கடலில்               காற்றழுத்தம்!
                
                  ஏற்றத்                தாழ்வுகளால்          ஏற்படுமே           போராட்டம்!
                 முற்றுகைப்       போராட்டமென  முகில்களின்     முடிவு!
                  சுட்டெரித்த        சூரியனைச்            சூழ்ந்தன              கருமேகங்கள்!
                 சீற்றமுடன்         காற்று !               சிறைப்பட்டான்  கதிரவன்!

                 காய்ந்த                நிலத்தைக்              களிப்படையச்    செய்ய
                 ஓயாமல்             பெய்த(து) மழை!    ஓடியது                 பெருவெள்ளம்!

                 நீரின்றிப்             போனதனால்          நீர் என்னை         அபகரித்தீர்!
                 வேறுஇடந்         தேடி                          விரைந்திடுவீர்    என
                 விரட்டின             ஏரிகள்!                    வெள்ளத்தில்       விளைநிலங்கள்!

                 காலைச்              செய்திக்குக்           காத்திருக்கும்      பெற்றோர்கள்!
                 பள்ளிகளுக்கு   விடுமுறை              பகர்ந்தது                தொலைக்காட்சி!
                 துள்ளினர்          சிறுவர்கள் ,             தொடர்ந்து              விளையாட!
                 அலுவலகம்        உண்டே!               அப்பாவின்            கவலை இது!

                 தெருவெங்கும்  பெருவெள்ளம் ! -   தினக்கூலி            பெறுவோர்
                 பிழைப்பைக்       கெடுக்கிறதே        பேய்மழை!            என்கின்றார்.

                 பெய்த                  மழைக்கும்          பெருங்கவலை   ஒன்றுண்டாம்
                 என்னென்று        கேட்க                      இயம்பிற்று            இவ்வாறாய்

                 "வாராமல்            நானிருந்தால்      வசைபாடும்           வையகமே!
                 ஓடிநான்               புகவே                    புதுவீடெனக்          கெதுவுமில்லை!
                 பொங்கிநான்      வந்தால்                  புகுந்திட                  இடமுமில்லை
                 வீணாக                நான்                      விரிகடலில்           கலக்கின்றேன்!

                 நீர் நான்             இல்லையெனில்   நீரற்றுப்                   போய்விடுவீர்!
                 நீர் என்னை      சேமித்தால்              நீரென்றும்              வளமாவீர்!"

                கோடைக்               காலத்தில்              குளம், குட்டை     தூர்வாரி
                அடைமழையை  அடைத்திட்டால் அண்டிடுமோ      நீர்ப்பஞ்சம்!

                                                                                                        -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

26 கருத்துகள்:

  1. மிக நல்ல கவிதை நண்பரே... ஏரிகளில் எல்லாம் வீடு கட்டி விட்டால் அதற்கும் தான் வழியேது....

    பதிலளிநீக்கு
  2. வீணாக நான் விரிகடலில் கலக்கின்றேன்!//
    முல்லைப்பெரியாருக்காக நாம் அடித்துக் கொள்ளும் (கொல்லும்) இந்த நேரத்தில் மழையின் சரியான கேள்வி

    பதிலளிநீக்கு
  3. கேள்விகள் பல . . .
    மாணவன் ரெடி. . .
    ஆசிரி-ர் தோன்றுவார். . .
    இ#றகைதான் ஆசிரி#ர். . .

    பதிலளிநீக்கு
  4. peimazhai peythapodhallam seithigal nokki neenda sevigal

    palli vidhumurai yendradhum veedhengum kondattam anal en ammavukku thindhattam.

    etthani erumaigalum(nangal azhuvar) veettukkulleye meyumendru vaditchukotti maladhu

    erundalum vadippal adippal anbhodu

    ellorukkum oremadhiri ammadan

    பதிலளிநீக்கு
  5. அன்பின் காரஞ்சன் - பெருமழை பெய்து பேரின்பம் கொடுக்கும் என நினைத்தால் பேய்மழையாய்ப் பெய்து பெருந்துன்பம் ஆனதே ! புதுவீடெனக் கெதுவிமில்லை! கெதுவுமில்லை. திருத்துக - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. excellent flow
    storming thought
    need for the hour
    congrats

    expecting more creations
    sivakamasundari

    பதிலளிநீக்கு
  7. மழைநீர் சேமிப்பின் அவசியம் நன்கு வலியுறுத்தப் பட்டுள்ளது. மழையில் நனைந்தேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. நல்ல கவிதை-மழை பலரது பார்வையில் எப்படி உள்ளது என்பதும்-மழை கவலைப் படுவது போல் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி உள்ள விதம் மிக அருமை! தொடரட்டும் உங்கள் கவிதைகள்
    -தமிழ்விரும்பி

    பதிலளிநீக்கு
  9. இது தான் குளம் என்று பாடம் எடுக்க மட்டுமே படங்களில் மட்டுமே காணப்படும் போல குளம் , குட்டிகள் அருமை

    பதிலளிநீக்கு
  10. அன்பின் காரஞ்சன் - வலைச்சரம் வழியாக வந்தேன். - ஏற்கனவே படித்து மறுமொழி இட்ட பதிவுதான் இது. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  11. நீர் நான் இல்லையெனில் நீரற்றுப் போய்விடுவீர்!
    நீர் என்னை சேமித்தால் நீரென்றும் வளமாவீர்!"

    கோடைக் காலத்தில் குளம், குட்டை தூர்வாரி
    அடைமழையை அடைத்திட்டால் அண்டிடுமோ நீர்ப்பஞ்சம்!/

    அருமையான வரிகள்..!

    பதிலளிநீக்கு
  12. குளம் குட்டை
    இருந்தாலல்லவோ தூர் வார

    நாங்கள் தங்கும் இடமாம்
    குளம் குட்டைகளில்
    வீட்டை கட்டிவிட்டீர்
    அதனால்தான் நாங்கள்
    (road) ரோடை எங்கள்
    சொந்தமாக்கி கொண்டோம்.

    ஆற்றங்கரையிலேல்லாம்
    அடுக்குமாடி குடியிருப்பு
    அதனால்தான் நாங்கள்
    அதனூடே பாய்கின்றோம்
    உங்களுக்கு அழிவைத் தருகின்றோம்
    எங்கள் மீது குற்றம் சுமத்தாதீர்
    உங்களிடம் குறைகளை
    வைத்துக்கொண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு