ஞாயிறு, 18 டிசம்பர், 2011

புற்றுநோயைப் புரையோட விடலாமா? -காரஞ்சன்(சேஷ்)

புற்றுநோயைப் புரையோடவிடலாமா?


                  வருங்கால பாரதத்தை
                  வடிவமைக்கும் சிற்பிகளே!

                  சிற்பிகளின் சிந்தனையில்
                  சீர்கேடு ஏற்பட்டால்
                  சிற்பம் என்னவாகும்?
                  சிந்திப்பீர் இக்கணமே!.

                 கல்லாத பெற்றோரும்
                 தம்பிள்ளை கற்றிடவே
                 கல்லூரிக் கனுப்பிவைப்பர்!
               
                 கற்றிடச் சென்ற பிள்ளை
                 பெற்றனன் சிலரால் தொல்லை!

                 மூத்தமாணவர் மொழியும்
                 அத்தனையும் இளைய மாணவர்
                  ஏற்றிடல் வேண்டுமாம்!

                 தனிமனித சுதந்திரத்தைத்
                 தட்டிப் பறிக்கும்விதம்
                  எழுதப்படாத சட்டமிதை
                 இயற்றியவர் யாரோ?

                உடலாலும் உள்ளத்தாலும்
                உற்ற துன்பத்தால்
                படிப்பதை விட்டுவிட்டு
                ஓடினர் பலபேர்!

                மனத்துயர் அதனால்
                மாண்டனர் சிலபேர்!

               பெற்றவர் பலர் கனவு
               பிழையாகிப் போனதென்ன!

              ஏனிந்த இழிசெயல்கள்
              'ராகிங்' எனும் பெயரால்?

               மாமியாரும் முன்பொருநாள்
               மருமகள்தான் என்பதனால்
               தம் மருமகளுக்குத் துன்பம்
               தாமும் தருதல் நன்றோ?

              புற்றுநோயான இதைப்
              புரையோட விடலாமோ?
             
               வேரறுப்போம் இதை
               மாணவர் சமுதாயம்
               மறுமலர்ச்சி பெற்றிடவே!

                                                            -காரஞ்சன் (சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

17 கருத்துகள்:

 1. மிக மிக நல்ல கவிதை... நிச்சயம் தடுக்கப்பட வேண்டிய ஒன்று.

  பதிலளிநீக்கு
 2. கட்டாயம் தடுக்கப்பட வேண்டிய விஷயங்கள்தான்.சிறப்பான கவிதை.

  பதிலளிநீக்கு
 3. அன்பின் காரஞ்சன் - ராகிங் என்பதோ நட்பினைப் பெருக்குவதற்காகத் துவங்கியது. ஆனால் இன்றோ பெருங்கொடுமையாக மாறி விட்டது. சட்டங்கள் போட்டாலும் - கட்டுக்குள் இருந்தாலும் சில எதிர் பாரா நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. புற்று நோயினைப் புரையேற விடக் கூடாது. உண்மை. சிறந்த சிந்தனையில் விளைந்த - இளைய சமுதாயத்திற்கான நற்கவிதை. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 4. வேரறுப்போம் இதை
  மாணவர் சமுதாயம்
  மறுமலர்ச்சி பெற்றிடவே!

  சிறப்பான சிந்தனைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 5. அன்பின் காரஞ்சன் - வலைச்சரம் மூலமாக வந்தேன் - ஏற்கனவே என் மறுமொழி இங்கே உள்ளது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு