புதன், 14 டிசம்பர், 2011

மரங்கள்! - காரஞ்சன்(சேஷ்)


அசோக மரத்திடம் ஒரு கேள்வி!

                     வேப்பிலை உடை தரித்து
                     வேண்டி நிற்கும் பெண்கள்போல்
                     இலையால் உன் உடல் போர்த்தி
                     என்ன வேண்டி நிற்கின்றாய்?


ஆலமரம்

                 விஞ்ஞான உலகில்
                 விதவிதமாய்த் தைலங்கள்!
                 எத்தனை வந்தாலும்
                 பாவையர் கூந்தலுக்கு
                 பயனெதுவும் கிடைக்கவில்லை!
                ஆறடிக் கூந்தல்
                அரையடி ஆனதுவே!

                 ஆண்டுக்கு ஆண்டு
                அடர்ந்த நின் கிளையெங்கும்
                விரிந்த சடைமுடியாய்
                விழுதுகளை நீவளர்க்கும்
                விந்தை என்னென்பேன்!
                                                                           -காரஞ்சன்(சேஷ்)
படங்கள்:உதவிக்கு கூகிளுக்கு நன்றி

6 கருத்துகள்:

  1. அன்பின் சேஷ், இயறகையினை இரசிக்கும் குணம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு