வியாழன், 8 டிசம்பர், 2011

தீபத்திருநாள்- கவிதை ஆக்கம்- காரஞ்சன்(சேஷ்)


இத்தனை நாளும் இருண்ட வானம்,
இனி ஓளி தரவே ஏற்றுவீர் தீபம்!
வறியவர் வாழ்வில் விடியல் மலர,
விழைந்து ஏற்றுவீர் வீடெங்கும் தீபம்!
கல்லாமை இருள் இல்லாமல் ஒழிய,
கற்றோர் ஏற்றுவீர் கல்வி எனும் தீபம்!
உழவும் தொழிலும் உயர்நிலை பெறவே,
உவந்து ஏற்றுவீர் உழைப்பெனும் தீபம்!
மன இருள் நீங்கி, மனைநலம் சிறக்க.
மங்கையர் ஏற்றுவீர் மஙகல தீபம்!
தீமை நீங்கி, நன்மை தழைக்க
தீபத் திருநாளில்
குவலயம் எங்கும் குன்றின்மேல் தீபம்!
                                            சேஷாத்ரி

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

8 கருத்துகள்:

  1. மாண் ஒளிநாள் பா,வைத்தீர்!
    மற்றுங்கள் வேட்புரைத்தீர்!
    காண்தீபம் நீள்கங்குல்
    கட்டறுத்துப் பாய்ச்சுமொளி!
    ஆண்டெல்லாம் இந்நாள்போல்
    ஆக்கமெலாம் சூழுகவே!
    நாண்மலர்போல் பாத்தொடர
    நாட்டமுடன் வேண்டுவனே!

    ---கவிஞ்ர் கணக்காயன்(இ.சே.இராமன்)

    பதிலளிநீக்கு
  2. மிக அருமை நண்பரே... ஒளி வீசட்டும் பாரெங்கும்....

    வெங்கட்
    புது தில்லி.

    கருத்துரைக்க Word Verification எடுத்து விடுங்களேன்... :)

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பரே word verification எடுத்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா! கவிஞ்ர் கணக்காயன்(இ.சே.இராமன்) மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன். உங்கள் கவிதை வரிகள் அருமை. பகிர்விற்கு நன்றி.
    நம்ம தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    பதிலளிநீக்கு
  5. இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள். பண்டிகைக்கு ஏற்ற நல்ல கவிதை. பாராட்டுக்கள். vgk

    பதிலளிநீக்கு
  6. deepa thirunaal kavithai nandragave irundhathu.irukkattum, irukattum.
    enge umadhu kavithai muallai periar patri, FDI patri,lokpal patri,
    seiveer nattu nadapai kavithaiyai.
    bharathi seithathu pol.
    umathu peyar nilaikum appothu.
    saravanabavan

    பதிலளிநீக்கு
  7. அன்பின் சேஷாத்ரி - அருமையான கவிதை - எத்தனை தீபங்கள் - அத்தனையும் ஏற்றுவோம் - குவலயம் சிறக்க ஏற்றிடுவோம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு