வியாழன், 24 ஏப்ரல், 2014

வாக்களிப்போம் என வாக்களிப்பீர்!- காரஞ்சன்(சேஷ்)









தேசத்தின் வளர்ச்சிக்கு
தேர்தல் ஒரு தேர்வு!
வாக்குகளைப் பெற வேண்டி
வாக்களிப்புகள் ஏராளம்!

ஒவ்வொருவர்
வாக்கினிலும்
ஒளிந்திருக்கும்
எதிர்காலம்!

களைகளைக் களைந்திட
கறைகளை அகற்றிட
அக்கறையொடு
ஆட்காட்டி விரலில்
கறை ஏற்போம்!

உரிமையை நிலைநாட்டி
உவகையுடன் வாக்களிப்போம்!
தேர்தலின் முடிவில்
தேசநலன் சிறக்கட்டும்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

14 கருத்துகள்:

  1. ஜனநாயகக் கடமைய ஆற்றிட அழைப்பு விடுக்கும் தங்கள் கவிதைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. நான் வாக்களித்துவிட்டேன் நண்பரே!- தக்‌ஷி

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    சனநாயகம் வளர்க.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. //களைகளைக் களைந்திட கறைகளை அகற்றிட அக்கறையொடு ஆட்காட்டி விரலில் கறை ஏற்போம்!//

    ;)

    வழக்கம்போல ஆட்காட்டி விரல் நகத்திலும் சதையிலும் நான் [என் துணைவியை துணையாக அழைத்துக்கொண்டு போய்] கறை ஏற்றிக் கொண்டதுடன், என் இடது கைப்பெருவிரலையும் அழுக்காக்கி, என்னைக் கைநாட்டுப்பேர்வழியாகவும் ஆக்கிவிட்டனர் இன்று.

    படித்தவர் படிக்காதோர் என்ற வித்யாசம் இல்லாமல் எல்லோரையும் கைநாட்டுப்பேர்வழிகள் ஆக்கிய நம் நாட்டு ஜனநாயகம் வாழ்க !

    உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இவ்வளவு அமைதியாக தேர்தல் வெற்றிகரமாக நடந்து வருவதைப் பார்க்க மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

    நம் தேர்தல் கமிஷனின் இந்த மாபெரும் வெற்றிக்கு முதலில் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  5. தேர்தலின் முடிவில்
    தேசநலன் சிறக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. ஆம் ஐயா! தேசநலனில் அக்கறை கொண்டோர்க்கு! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  8. காலையிலேயே வாக்களித்துவிட்டேன்! நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. கறைகளை அகற்றிட... கறை ஏற்போம்... நல்ல கருத்து.

    சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு