ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

மஞ்சள் வெயில் மாலையிலே! -காரஞ்சன்(சேஷ்)

                                           
      
மஞ்சள் வெயில் மாலையிலே!
மஞ்சள் வெயில்.... மாலையிலே
மாங்குயில்கள்…,, கூவிடுதே!

கூவும் குயிலின் பாஷையில்
கூடி மகிழ  ஆசைகள்!
கூடிப் பறக்கும் பறவைகள்
கூடு திரும்பும் காட்சிகள்!

ஏதோ ஒரு ஏக்கம்
ஏனோ என்னைத் தாக்கும்!
                         (மஞ்சள் வெயில்)

கொன்றை மரங்களும் மஞ்சள் மலர்களை
எங்கும் இறைத்திடுதே! 
பூவின் இதழ்களைத் தாவும் அணில்களும்
தேடிச் சுவைக்கிறதே! 
வாசம் வீசும் பூவும் மலர்ந்ததே!
நேசக் கதைகள் பேசத் துடிக்குதே!

உள்ளத்தில் உன்னுடன் வாசம்
மனம் மெல்லவே உன்னுடன் பேசும்
சுகமே.... தருமே!  நினைவே…
                              (மஞ்சள் வெயில்) 

நெஞ்சம் முழுவதும் உந்தன் நினைவுகள்
தஞ்சம் புகுந்திடுதே! 
உனைக் காணும்பொழுதினில் மாலைக் கதிரவன்
நாணும் முகத்தினிலே!
நாளும் உன்னைக் காண ஏங்கினேன்!
நாணம் மோத நானும் தயங்கினேன்!

கோடையில் வெயிலின் தாக்கம்
கொட்டிடும் மழைவந்துத் தீர்க்கும்!
மழையாய்.. வருவாய்.. தருவாய்

                                 (மஞ்சள் வெயில்)
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

39 கருத்துகள்:

  1. வாசம் வீசும் பூவும் மலர்ந்ததே!
    நேசக் கதைகள் பேசத் துடிக்குதே!

    அழகான வரிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்கி படப் பாடல் மெட்டில் எழுத முயற்சித்ததின் வெளிப்பாடு இது! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  2. // நெஞ்சம் முழுவதும் உந்தன் நினைவுகள்
    தஞ்சம் புகுந்திடுதே! //

    அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    வரிகள் மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  4. மழையாய் வருவாய் தருவாய்! மழை சீக்கிரம் பொழியட்டும்! மாநிலம் செழிக்கட்டும்! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  5. அருமையான படம்.... மிகச் சிறப்பான, பொருத்தமான கவிதை.. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
    2. கூவும் குயிலின் பாஷையில்
      கூடி மகிழ ஆசைகள்!
      கூடிப் பறக்கும் பறவைகள்
      கூடு திரும்பும் காட்சிகள்!
      வரிகள் ஓவொன்றும் நன்றே ரசித்தேன்.நன்றி...!

      நீக்கு
    3. தங்களின் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  7. /நாளும் உன்னைக் காண ஏங்கினேன்!
    நாணம் மோத நானும் தயங்கினேன்!/ நன்று...தொடர்க நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  8. சந்தம் அருமை! வரிகள் அருமை! தொடர்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  9. பாடல் வரிகள் அருமை! இரசித்தேன்! தொடர்க!- தக்‌ஷி

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  11. ஏதோ ஒரு சினிமா பாடல் போல் இருக்கிறதேவென்று நினைத்து க் கொண்டே படித்தேன்,நல்ல வேளை,நீங்களே சொல்லி விட்டீர்கள் .அதைவிட இது நன்றாய் இருக்கிறது !
    த ம 3

    பதிலளிநீக்கு
  12. அழகான கற்பனை . பாடலை உள்வாங்கி மனம் உங்கள் கற்பனை யையும் விரித்திருக்கின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மிக மகிழ்வளித்தது! நன்றி!

      நீக்கு
  13. அழகான பாடல். பகிர்வுக்கு நன்றிகள் சகோதரரே.

    பதிலளிநீக்கு
  14. பாடிக் களித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. தங்களின் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு