குழந்தைகளுக்குத் தோண்டிய
குழிகளா
ஆழ்துளைக் கிணறுகள்?
நித்தம்
ஒரு விபத்தா?
ஏதும் அறியாக் குழந்தைகள்
ஏன் பலியாக வேண்டும்?
பலமணிநேரப் போராட்டம்
பலனின்றிப் போகிறதே!
நீரில்லையெனில்
நிரந்தரமாய் அதைமூட
விதிகள் வகுத்தால்
விளையாட்டுக் குழந்தைகள்
வீழ்வாரோ அதனுள்ளே?
இன்னுயிர்கள் பலகாக்க
இனியேனும் விதிசெய்வோம்!
அனுமதியுடன்தான்
இனி
ஆழ்துளைக் கிணறுகள்!
மூடாமல் விடுபவர்தாம்
முழுப்பொறுப்பு
விபத்திற்கு!
இன்னுயிர்கள் பலகாக்க
பதிலளிநீக்குஇனியேனும் விதிசெய்வோம்!
அதை எந்த நாளும் காப்போம்..!
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
நீக்குஇனியேனும் இது போல் நடக்கவே கூடாது...
பதிலளிநீக்குஉண்மைதான்! அதுவே நம் அனைவரின் வேண்டுதலாக இருக்கட்டும்! நன்றி!
நீக்குஇனியேனும் இது போல் நடக்கவே கூடாது...
பதிலளிநீக்குஉண்மைதான்! அதுவே நம் அனைவரின் வேண்டுதலாக இருக்கட்டும்! நன்றி
நீக்குவணக்கம்,
பதிலளிநீக்குநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
நன்றி!
நீக்குஇப்பொழுதுதான் எங்கள் பிளாக்கில் இதுபற்றிய செய்தியொன்றை வாசித்துவிட்டு என் கருத்தைப் பதிவு செய்துவிட்டு வருகிறேன். இங்கே உங்கள் கவிதை கண்டு அசந்துநிற்கிறேன். கவிதையின் கடைசிவரிகள் கட்டாயமாய் செயல்படுத்தப்படவேண்டும். சிந்திக்கவைக்கும் வரிகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகையும், கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி! இத்தனை துயர நிகழ்வுகளுக்கு அப்புறமாவது ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
நீக்குhats up for your very good social thinking
பதிலளிநீக்குanthuvan cuddalore
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
நீக்குநிஜம் தான். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பெற்றோர்களும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
பதிலளிநீக்குநன்றி.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குஇனியேனும் விதி செய்வோம்...
பதிலளிநீக்குஒவ்வொரு நாளும் இப்படி வரும் செய்திகள் மனதைக் காயப்படுத்துகின்றன. என்றைக்கு தான் திருந்துவார்களோ.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குஇன்னுயிர்கள் பலகாக்க
பதிலளிநீக்குஇனியேனும் விதிசெய்வோம்!//அருமைக்கவி.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
பதிலளிநீக்கு