வெள்ளி, 18 ஏப்ரல், 2014

இன்னுயிர் காக்க இனியேனும் விதி செய்வோம்! -காரஞ்சன்(சேஷ்)


குழந்தைகளுக்குத் தோண்டிய
குழிகளா ஆழ்துளைக் கிணறுகள்? 
நித்தம் ஒரு விபத்தா?
நெஞ்சம் துடிக்கிறதே!
 
ஏதும் அறியாக் குழந்தைகள்
ஏன் பலியாக வேண்டும்?
பலமணிநேரப் போராட்டம்
பலனின்றிப் போகிறதே!
 
நீரில்லையெனில்
நிரந்தரமாய் அதைமூட
விதிகள் வகுத்தால்
விளையாட்டுக் குழந்தைகள்
வீழ்வாரோ அதனுள்ளே?
 
இன்னுயிர்கள் பலகாக்க
இனியேனும் விதிசெய்வோம்!

அனுமதியுடன்தான் இனி
ஆழ்துளைக் கிணறுகள்!
மூடாமல் விடுபவர்தாம்
முழுப்பொறுப்பு விபத்திற்கு!
  -காரஞ்சன் (சேஷ்)

18 கருத்துகள்:

  1. இன்னுயிர்கள் பலகாக்க
    இனியேனும் விதிசெய்வோம்!
    அதை எந்த நாளும் காப்போம்..!

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. உண்மைதான்! அதுவே நம் அனைவரின் வேண்டுதலாக இருக்கட்டும்! நன்றி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. உண்மைதான்! அதுவே நம் அனைவரின் வேண்டுதலாக இருக்கட்டும்! நன்றி

      நீக்கு
  4. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  5. இப்பொழுதுதான் எங்கள் பிளாக்கில் இதுபற்றிய செய்தியொன்றை வாசித்துவிட்டு என் கருத்தைப் பதிவு செய்துவிட்டு வருகிறேன். இங்கே உங்கள் கவிதை கண்டு அசந்துநிற்கிறேன். கவிதையின் கடைசிவரிகள் கட்டாயமாய் செயல்படுத்தப்படவேண்டும். சிந்திக்கவைக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும், கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நன்றி! இத்தனை துயர நிகழ்வுகளுக்கு அப்புறமாவது ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

      நீக்கு
  6. நிஜம் தான். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பெற்றோர்களும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. இனியேனும் விதி செய்வோம்...

    ஒவ்வொரு நாளும் இப்படி வரும் செய்திகள் மனதைக் காயப்படுத்துகின்றன. என்றைக்கு தான் திருந்துவார்களோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  8. இன்னுயிர்கள் பலகாக்க
    இனியேனும் விதிசெய்வோம்!//அருமைக்கவி.

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு