செவ்வாய், 2 அக்டோபர், 2012

காந்தி! -காரஞ்சன்(சேஷ்)


காந்தி! 
தேசத் தந்தையே!
வாராக் கடனிற்கும்
வைக்கின்றார் உன் பெயரை!
சிரித்த உன்முகம்தான்
செலவழியும் பணத்திலெல்லாம்!
அதனால்..
பாவ புண்ணியங்களில்
பங்குண்டு உந்தனுக்கும்!
 
நீட்டிய கரங்களிலே
நின்முகம் தவழ்ந்தால்தான் 
கடமை ஆற்றுவதில் சிலர்
காட்டுகிறார் வேகத்தை!

எண்ணும் வேளையிலே-உமை
எண்ணி அவர் பார்த்திட்டால்
இந்நிலை மாறிடலாம்!

இவையொரு புறமிருக்க....

இன்று நான் கண்ட காட்சி!

குடிசை வாசலொன்றில்
சிரித்த உன் படம்வைத்து
நறுமண மலர்தூவி
சிறுவர்கள் வணங்கி நின்றார்!

நீ பிறந்த இந்நாளில்
நம்பிக்கை ஒளிவெள்ளம்
நாடெங்கும் பரவட்டும்!

-காரஞ்சன்(சேஷ்)

30 கருத்துகள்:

  1. சிறப்பான நாளில் சிறப்பான பகிர்வு ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நம்பிக்கை அளிக்கும் நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

    இன்றைய வலைச்சரத்தில் என்னைப் பற்றி ஏதேதோ எழுதியுள்ளார்கள்.
    முடிந்தால் போய்ப் பார்த்து கருத்து அளியுங்கள், நண்பரே.

    இணைப்பு இதோ:
    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைச்சரத்தில் தங்கலைப் பற்றிய தகவல்களைப் படித்தேன்!
      நீங்கள் ஒரு சாதனையாளர் என்பதில் ஐயமில்லை! தங்களின் வலைப்பணியைத் தொடர வேண்டுகிறேன்.வருகைக்கு நன்றி -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  4. நீ பிறந்த இந்நாளில்
    நம்பிக்கை ஒளிவெள்ளம்
    நாடெங்கும் பரவட்டும்!

    ஆமாங்க ஒரு நாள◌ாவது வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு கவிதை! நம்பிக்கை பிறக்கிறது அந்த குடிசை வாசிகளை பார்த்து! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. உள்ள நிலைமையை அருமையாக
    எழுத்தில் வடித்துவிட்டீர்கள்
    பாராட்டுக்கள்

    பாவ புண்ணியத்தில் உனக்கு பங்குண்டு

    அவர் செய்த பாவம் நமக்கு அந்நியர்களிடமிருந்து
    விடுதலை வாங்கி தந்ததே )

    எண்ணும் வேளையிலே-உமை
    எண்ணி அவர் பார்த்திட்டால்
    இந்நிலை மாறிடலாம்!

    காசைஎண்ணுபவரின் எண்ணம் காசில்தான் இருக்கும்)
    நறுமண மலர்தூவி
    சிறுவர்கள் வணங்கி நின்றார்!

    (சிறுவர்கள் மட்டும்தானா,காந்தி மகானின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டு அவர் சமாதியில் நம் ஜானதிபதி முதல்,அனைத்து அரசியல்வாதிகளும் மலர் தூவி பிரார்தனை செய்து ஊடகங்களுக்கு தரிசனம் அளித்து தங்கள் ஜனநாயக அஞ்சலிகளை முடித்துக்கொண்டு அவரவர் வேலைகளை பார்க்க போய்விட்டனர்)

    தொலைகாட்சிகளிலும் காந்தி படத்தை காட்டுவதாக தம்பட்டமடித்து இடையிடையே விளம்பரங்களை வெளியிட்டு காசு பார்த்து கொண்டிருக்கின்றனர்

    காந்தி கண்ட சுதேசி இயக்கம் அன்று கோடிகணக்கான நெசவாளர்களின் பசியை விரட்டியது.

    சுதந்திர இந்தியாவில் நெசவாளர்கள் தினமும் வாழ வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டு மாண்டுகொண்டிருக்கின்றனர்.

    காந்தி குடியை நாட்டை விட்டு விரட்டி சென்ற தலைமுறையை காப்பாற்றினார்.

    இன்று ஆளும் அரசுகள் குடியை விற்று குடியை கெடுக்கும் பணியை செய்து மக்களின் வாழ்வை அழித்து கொண்டிருக்கின்றன.

    விண்ணுலகில்இருந்து இவைகளையெல்லாம் காணும் காந்தியின் ஆன்மா என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளுக்குள் அழுதுகொண்டு ரூபாய் நோட்டுக்களில் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விண்ணுலகில்இருந்து இவைகளையெல்லாம் காணும் காந்தியின் ஆன்மா என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளுக்குள் அழுதுகொண்டு ரூபாய் நோட்டுக்களில் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கிறார்.
      /அருமை!//

      நீக்கு
    2. தேச பிதாவாகிய மகாத்மா காந்தியாலேயே
      ஒன்றும் செய்ய இயலவில்லை

      பாரதி சொன்னதுபோல்
      இன்று நம் நாட்டில் நெஞ்சில் உரமின்றி
      நேர்மை திறனின்றி வஞ்சனை
      செய்து கொண்டிருக்கிறார்கள்
      நம்மை ஆளுபவர்கள்.

      வாய் சொல்லில் வீரர்களான அவர்கள்
      நம்முடைய மக்களை குடிக்கும்,இலவசங்களுக்கும் அடிமையாகிவிட்டார்கள்

      லஞ்சமும்,பொய்யும் ஊழலும்
      இன்று நம் நாட்டை பீடித்துள்ள
      தீர்க்க முடியா வியாதிகள்.

      அதை தீர்க்கும் மருத்துவர்களும் இல்லை
      மருந்துகளும் இல்லை.

      நம்மை போன்றவர்கள் வருந்துவதை தவிர
      வேறு வழி தெரியவில்லை

      நீக்கு
    3. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!

      நீக்கு
  7. நம்பிக்கையூட்டிப்போனதாகசச் சொன்ன நிகழ்வு
    உண்மையில் அனைவருக்குள்ளும்
    நமபிக்கையை விதைத்துப் போகிறது
    காந்தி ஜெயந்தி சிறப்புப் பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  9. காந்தியுடன் சாந்தியும் நிலவ உங்களின் கவிதை உந்தும்...! வாழ்த்துக்கள் நண்பரே...!

    பதிலளிநீக்கு
  10. அருமையானதோர் பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. உங்களைப் போன்றோர் காந்தியை இன்னும் மதிப்பதனாலேயே மனிதத்துவம் இன்றும் நிலைக்கின்றது . அகிம்சை பற்றிச் சிலராவது சிந்திக்கிறார்கள். கவிதை வரிகள் எளிமையும் மனதில் பதியும் வண்ணமுமாக இருக்கின்றது . வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துப் பதிவும் மகிழ்வளிக்கிறது! நன்றி!

      நீக்கு
  12. இந்த மாதிரி கீழ் மட்ட இந்திய தூண்கள் தான் இன்னும் இவரை தேச தந்தையாக கொண்டாடுகின்றனர் ..
    மேல் மட்ட பதறுகள் கொள்ளை அடித்து கோடி பேருக்கும் வழியில் இவரை நினைப்பதே இல்லை ...

    மாறனும் , மாற்ற முயல்வோம் .. நற் கவிதை என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தோழரே!

    பதிலளிநீக்கு
  14. //நீட்டிய கரங்களிலே
    நின்முகம் தவழ்ந்தால்தான்
    கடமை ஆற்றுவதில் சிலர்
    காட்டுகிறார் வேகத்தை!//

    உண்மை.

    சிறப்பான கவிதை நண்பரே.... இன்னமும் நம்பிக்கை ஒட்டிக்கொண்டிருப்பதால் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது பலருக்கு....

    பதிலளிநீக்கு
  15. உண்மை!
    வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு