சனி, 13 அக்டோபர், 2012

வானும் நிலவும்! -காரஞ்சன்(சேஷ்)

வானும் நிலவும்!

 
 

வானும் நிலவுமாய்
வாழ்ந்திடுவோம்
நாம் என்றாய்!
நான் ஓடாய்த்
தேய்கையில்தான்
உண்மை புரிகிறது!

-காரஞ்சன்(சேஷ்)

Photo courtesy: Jyotsna Ramanan

21 கருத்துகள்:

  1. சந்தனம் தேய தேய
    நறுமணம் தரும்

    தேய்வது மீண்டும்
    வளர்வதற்குதான்
    என்பதை
    நீ அறியாயோ?

    பின் வருத்தம் எதற்கு ?

    தவறு செய்வதும்
    செய்தபின் வருந்துவதும்
    வருந்தியபின் திருந்துவதும்
    வாழ்வின் உயர்வுக்கு
    உறுதுணையாவது
    என்பதை நீ அறியாயோ?

    எது வரினும் நான் உன்னுடன்
    இருப்பேன் மாறா அன்போடு

    கவலை வேண்டாம்
    என் அன்பே

    பதிலளிநீக்கு
  2. நிலவு தேய்ந்தபின் தான் அமாவசை வருகிறது அதுபோல மனது தேய்ந்தபின் தான் மனக்குழப்பமும் வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமாவாசையை தொடர்ந்து நிலவு
      நாளொரு மேனியும் பொழுதொரு
      வண்ணமுமாய் வளர்ந்து
      முழு நிலவாய் ஒளிவீசிடும்
      காட்சியை மனதில் கொண்டால்
      மனக்குழப்பம் நீங்கிவிடும் நண்பரே

      நீக்கு
  3. தேய்வதிலும் சுகமிருப்பது உண்மைதானே

    பதிலளிநீக்கு