கற்காலம்!
கால மாற்றத்தில்
கைவிடப்பட்ட
ஆட்டுரலும் அம்மியும்
மீண்டும் வீட்டிற்குள்!
மின்வெட்டு மிகுந்ததனால்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
பட்டாபிசார் கருத்துரையால் இந்தப் பாடல் பிறக்குது!
-காரஞ்சன்(சேஷ்)
கால மாற்றத்தில்
கைவிடப்பட்ட
ஆட்டுரலும் அம்மியும்
மீண்டும் வீட்டிற்குள்!
மின்வெட்டு மிகுந்ததனால்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
பட்டாபிசார் கருத்துரையால் இந்தப் பாடல் பிறக்குது!
பாட்டிக்கால ஆட்டுக்கல்லும்
வீட்டிலிருக்குது!
அதை
காட்சிப்பொருளாய்
காணும்போது
நெஞ்சம் வலிக்குது!
போட்டி போட்டு அரைத்த
காலம்- நினை
வேட்டிலிருக்குது!
கூட்டி அரைத்த கரங்களிலோ –முதுமை
கூடிநிற்குது!
ஆடிக்களைத்த அவர்களுள்ளம்-
ஓய்வை
நாடிநிற்குது!
அரைத்த மாவும் பொட்டலமாய்
இங்கே கிடைக்குது!
வாங்கிவந்து வார்த்துவைக்க-
வயிறு நிறையுது!
இரைச்சலோடு அரைக்கும்
மிக்ஸி
எரிச்சல் கூட்டுது!
இயந்திர வாழ்க்கையிலே-
இதுவே
இயல்பாய்ப் போனது!
அது சரி ஐய்யா
பதிலளிநீக்குஆட்டுக்கல்லை ஆட்டுவதற்கு
இக்கால ஆடவருக்கும் தெம்பில்லை
அவர்களை ஆட்டி வைக்கும்
ஆண்ட்டிகளுக்கும் தெம்பில்லை
பாக்கெட்டிலே வகை வகையா
மாவு கிடைக்குது
அதை வாங்கி வீட்டில் வைத்தால்
கிடைத்துவிடும் இட்டிலியும் தோசையும்
ஆட்டுக்கல்லை ஆட்ட சொல்லி
ஆத்துக்காரியை சொன்னால்
அவள் சொல்லிவிட்டாள்
கைபேசியில் விரலால் அமுக்கி
அலுவலகத்தில் கணினியில் எலிப்பொறியில்
கைவைத்து என் கை விரலும் சுளுக்கிகொண்டது
போகும் வழியில் உணவகத்தில் சாப்பிட்டுவிடலாம்
இப்போது என் வலிபோக
கைவிரல்களை பிடித்து
விடுங்கள் என்கிறாள்
வீட்டில் இருக்கும் பாட்டிகளை
மாவு ஆட்ட சொன்னால்
அதெல்லாம் அந்த காலம்
என்னை ஏதாவது வேலை
செய்ய சொன்னால்
நான் முதியோர் இல்லத்திற்கு
சென்றுவிடுவேன் என்று மிரட்டுகிறாள்
தாத்தாவை கொஞ்சம்
உதவி செய்ய சொன்னால்
பாட்டி சொன்ன
பதிலைத்தான் சொல்லுகிறார்.
இருவரும் அலுவலகத்திற்கு செல்லுகிறோம்
பள்ளி செல்லும் குழந்தையை
பார்த்துக்கொள்ள வயதானவர்கள்
சேவை நமக்கு தேவை.
எனவே காட்சிபோருளாக மிக்ஸியின்
பக்கத்தில் அம்மியும்
கிரைண்டரின் பக்கத்தில்
உரலும் கொழுவியும் வைத்துவிட்டேன்
பையன் இவை என்னப்பா என்று கேட்கிறான்
இவை இரண்டும் மிக்ஸி மற்றும் கிரைண்டரின்
அம்மா அப்பா என்று சொன்னேன்
அவன் சிரித்தான்.
நானும் சிரித்தேன்
உங்கள் கவிதையினால்
விளைந்த கற்பனை
வரியினை நினைத்து
தங்களின் கருத்துரையால் பிறந்த கவிதையை இட்டுள்ளேன்!
நீக்குசிரித்து மகிழ்ந்தேன்!
பதிலளிநீக்குsuper, and superb
பதிலளிநீக்குஇயற்கையின் இரைச்சல்
இன்பம் தருகிறது
அலைகடலின் அலைகளோசை
ஆனந்தத்தை தருகிறது
எல்லையில்லா பரந்து விரிந்த கடல்
நாம் படும் தொல்லையெல்லாம் மறக்க செய்கிறது
நதிகளில் நீர் சலசலத்து ஓடும் ஓசை
அந்தி நேரத்தில் கோயிலிருந்து
காற்றில் தவழ்ந்து வரும் மணியோசை
இவையெல்லாம் இன்பம் தருபவன
லப்டப் என்னும் நம் இதயத்தின் ஓசை
இவ்வுலகில் நம் வாழ்நாளை நீட்டிக்கிறது
பறந்து திரியும் பறவைகளின் ஓசைகள்
நம் மனதை இதமாய் வருடுகின்றன
ஆனால் மனிதன் கண்டுபிடித்த
கருவிகள் எழுப்பும் ஓசை
கண்ணை குருடாக்குகின்றன (தொலைக்காட்சி,கணினி,)
செவியை செவிடாக்குகின்றன (பல்வேறு இயந்திரங்களின்/
வாகனங்கள், /ஒலிபெருக்கிகள் /போன்றவை)
மனதில் அமைதியை குலைக்கின்றன
இன்னும் ஏராளம் ஏராளம்.
மீண்டும் கற்காலத்திர்க்கே சென்றுவிடுவோம்
தற்கால நவீன வசதிகளோடு
அற்புதம்!நன்றி
நீக்குஆஹா... ஒரு கவிதைக்கு பல கவிதைகள் + கருத்துக்கள்...
பதிலளிநீக்குநன்றிகள்...
வருகை மகிழ்வளித்தது! நன்றி
நீக்குநன்றி ஐயா!
பதிலளிநீக்குகற்காலம்!
பதிலளிநீக்குநிதர்சனக் கவிதைக் காலம் !
அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி!அவசியம் வருகிறேன்!
பதிலளிநீக்குநல்ல கவிதை.... பதில் கவிதை.... :)
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
பதிலளிநீக்குnallaaa irukku...
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குநண்பரே! "மீட்டிட வருவானோ?" முடிந்தால் படிக்கவும்! நன்றி!
நீக்குநான்கூட 50 வருடங்களுக்கு முன் கற் காலத்தில்தான் இருந்திருக்கேன். அம்மியும் ஆட்டுரலும் தான் உபயோகித்திருக்கேன், அந்த காலங்கள் பொற்காலங்கள் தான் கை கால்களுக்கு நல்ல பயிற்சியாகவும் இருந்தது.வசதிகள் பெருக பெருக உடல் உழைப்பு குரைய குறைய டாக்டர் பில் தான் ஏறிகிட்டே போகுது
பதிலளிநீக்குஉண்மைதான் அம்மா! வசதிகள் பெருகிட உடல் உழைப்பு என்பது குறைந்து பரபரப்பு மிகுவதால் நோய்கள் பெருகுது!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
good thinking congrats
பதிலளிநீக்குanthuvan cuddalore
நானும் என் பள்ளி நாட்களில் கூட அம்மாவுக்கு உதவியாக ஆட்டுரலில் அரைத்து கொடுத்திருக்கிறேன். அடைக்கு அரைத்தால் கையெல்லாம் எரியும்.....
பதிலளிநீக்குகவிதை அருமை.
தங்களின் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்குகற்காலமும் தற்காலமும் பற்றி நல்லதோர் சிந்தனை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குமின்தடை + கணினியில் தங்களின் பின்னூட்டப்பெட்டி திறக்காமல் ஏதேதோ பிரச்சனைகள். அதனால் தாமதம். மின்னஞ்சலில் கூட தெரிவித்திந்தேன். தங்களின் பதிலும் கிடைத்தது. நன்றி.
மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்கு