வெள்ளி, 19 அக்டோபர், 2012

'ஆ' வோ! ஆவோ.. காரஞ்சன்(சேஷ்)


‘ஆ’ வோ?    ஆவோ!..
 



நடைமேடை மீதினிலே நடைபழகும் உந்தன்
அழகிய படம் கண்டு “ஆ”வென்று ரைத்தேன்!
 
வழிதவறி வந்தனையோ? வரவேற்க வந்தனையோ?
ஊட்டி உறவாடும் உன்கன்றின் சிந்தனையோ?
 
மொழியறியாத் துன்பநிலை முற்றிலும் உனக்கில்லை!
விரைவு இரயிலேற விதிஉன்னை ஏற்பதில்லை!
 
விட்டுப் பிரிந்தானோ? உனைவிற்கத் துணிந்தானோ?
கட்டிய கயிறுடனே கால்நடையாய் வந்திங்கு
எட்டிய மட்டில் யாரை நீ தேடுகிறாய்?


                                                            -காரஞ்சன்(சேஷ்)

 

16 கருத்துகள்:

  1. படமும் அதன் தொடர்சியாய் வளர்ந்த்
    கற்பனையும் அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. படமும் அதற்கேற்ப உங்கள் கற்பனைக் கவிதையும் அருமை நண்பரே... தொடரட்டும் படங்களும் படத்திற்கேற்ற கவிதைகளும்.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் உடனடி வரவும் வாழ்த்துக்களும் ஊக்கமளிக்கிறது! வருகைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  4. வழி தவறிய மாட்டிற்கு ஒரு கவிதை... ஹ்ம்ம்! நல்ல கற்பனை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் வருகைக்கு நன்றி!பிற பதிவுகளையும் படித்து தங்களின் கருத்தினைப் பதியலாமே!

      நீக்கு
  5. பேராசைக்கார மனிதர்கள்
    எங்களுக்கு இழைத்த துன்பங்கள் போதும்
    இனி இப்பிறவி வேண்டாம் என்று
    உயிரை விட கேரளாவிற்கு வண்டியேற
    ரயிலடிக்கு வந்தேன்
    உங்களிடம் சிக்கிக்கொண்டேன்

    பதிலளிநீக்கு
  6. தங்களின் கருத்துரை கண்டேன்! வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அருமையாக இருந்தது. படமும், அதற்கேற்ற வரிகளும்.

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி!

    பதிலளிநீக்கு