புதன், 17 அக்டோபர், 2012

இடஒதுக்கீடு!-காரஞ்சன்(சேஷ்)

                   இடஒதுக்கீடு!




மிரட்டிய  மின்னலையும்
இடித்துரைத்த இடியையும்
பொருட் படுத்தவில்லை
பூமிக்கு வந்தமழை!

இறங்கும் மழைநீர்க்கு
இடஒதுக்கீடு கோரி
அடைமழை வந்திங்கு
அடைக்கிறதோ சாலைகளை?

வந்தடையும் மழைநீர்க்கு
தந்திடுவோம் த(ங்)க்க இடம் !
வாழ்த்தி வளம்கொழித்து
வாழ்விக்கும் நம்மையெல்லாம்!

படம்: நன்றி மாலைமலர்.

26 கருத்துகள்:

  1. இறங்கும் மழைநீர்க்கு
    இடஒதுக்கீடு கோரி
    அடைமழை வந்திங்கு
    அடைக்கிறதோ சாலைகளை?
    ----
    எல்லோரும் யோசிக்க வேண்டுமென கூறுவது சிறப்பு

    பதிலளிநீக்கு
  2. அருமை.
    நீர்த்தடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பில், சீமைக்கருவேல் வளர்ந்து கிடக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. மழை நீர் சேருமிடமெல்லாம் தான் அடுக்குமாடி கட்டிடங்கள் வந்துவிட்டதே... :(

    நல்ல கருத்துள்ள கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! பிற பகிர்வுகளையும் படித்து தங்களின் கருத்தினைப் பதிய விழைந்தழைக்கிறேன்! நன்றி!

      நீக்கு
  4. குளத்திலோ,ஏரியிலோ இடம் தந்தால்
    பயனுண்டு மானிடத்திற்கு

    ஆனால் சாக்கடையில் அல்லவோ
    இடம்தருகிறோம்

    நம்மை கடித்து நம்மை சாகடித்து
    தானும் மாண்டுபோகும்
    கொசுக்கள் வீடு கட்டி குடியேற

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொசுத்தொல்லை அதிகமாவது கவலையளிக்கிறது! டெங்கு ஒருபுறம் பயமுறுத்துகிறது! தங்கள் வருகைக்கு நன்றி!

      நீக்கு
  5. மழைக்காலம் வரும் போது தான் இதைப் பற்றியே எண்ணம் வந்தால்... என்ன செய்வது...?

    பதிலளிநீக்கு


  6. நத்தை வேகத்தில் நகருக்கு எத்தனை சொன்னாலும் புரியாது!
    கவிதை நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது ஐயா! நன்றி!

      நீக்கு
  7. மிக மிக அழகான கவிதை வரிகள்...பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான்! மாறிவரும் பட்டியலில் மாரியும் சேர்ந்திடுச்சு! நன்றி!

    பதிலளிநீக்கு