செவ்வாய், 30 அக்டோபர், 2012

தளர்ந்த வயதில் மலர்ந்த நினைவுகள்!-காரஞ்சன்(சேஷ்)


 

தளர்ந்த வயதில் மலர்ந்த நினைவுகள்!

சிறுவயதுப் பருவங்கள் 
சிந்தையில் மலர்ந்தனவோ?

விடுமுறை நாட்களில்
விளையாடி மகிழ்ந்தகதை
நீங்காது இன்னும்
நினைவலையில் இருக்குதடி!

பூவரச இலைசுருட்டி
ப்பூ .ப்பூ ஊதிநின்றோம்!
முதிர்ந்தநுணாக் காய்களிலே
முக்கோணம் சதுரமென
தென்னங் குச்சிகளை
தேர்செய்யக் கோர்த்திட்டோம்!

உண்டாக்கிய தேரை
உவகையுடன் இழுத்திட்டோம்!
 
கல்லா? மண்ணா?வொடு
கண்ணாமூச்சி, பாண்டியென
களிப்புடன் விளையாடிக்
களைத்துத் திரும்பிடுவோம்!

 மணலில் வீடுகட்டி
மாளிகை என்றுரைத்தோம்!
எண்ணம்போல் கிறுக்கலுக்கு
ஏதேதோ பேர்வைத்தோம்!
 
காய்ந்த பனைஓலையிலே
கருவேல முள்ளிணைத்து
காற்றாடி சுற்றிடவே
கால்வலிக்க ஓடிநிற்போம்!

 பல்லாங்குழி, பரமபதம்
தாயம் இவையெல்லாம்
வெயில் மிகும்வேளை
வீட்டிற்குள் விளையாட்டு!

 திருவிழா நாட்களில்
தின்பண்டம் மட்டுமன்றி
வண்ணக் கண்ணாடியும்
வாங்கிட அடம்பிடிப்போம்!

வெள்ளரிப் பழத்தினிலே
வெல்லமும் சேர்த்துண்போம்!
வெண்ணிற நுங்குகளை
விரல்வழி உறிஞ்சிடுவோம்!

 கலந்த சோற்றிற்கு
கைநீட்டிக் காத்திருப்போம்!
வழங்கிடுவாள் அன்னை
வரிசையில் அமரவைத்து!

தும்பைப் பூத்தொடுத்து
துவளும் முறுக்குசெய்தோம்!
இந்தத் தலைமுறையில்
இவையனைத்தும் இல்லையடி!     
 
 -காரஞ்சன்(சேஷ்)
படங்கள் உதவி: கூகிளுக்கு நன்றி

22 கருத்துகள்:

  1. பழமை நினைவுகளைப் பறைசாற்றிடும் அற்புதமான கவிதை வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் இப்படி மறக்கமுடியாத நினைவுகள் இருக்கத்தான் செய்யும் அதை அழகாக சொல்லி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  3. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்மா!

    பதிலளிநீக்கு
  4. தா வரம் . . . . வரம் தந்தேயாக வேண்டும் ..
    தளரந்த வயது ...
    முதிர்ந்த சொற்கட்டுகள் ..
    தொடரட்டும் ..

    பதிலளிநீக்கு
  5. உண்மை தான்.....இந்த தலை முறையில் இது எல்லாம் சாத்தியம் இல்லை....ஆனால் கண்டிப்பாக இனி வரும்...அது தான் மக்கள் மறந்து போன அம்மி கல்லே வந்துருச்சே.....அப்போ இது வராத என்ன...பொறுத்திருந்து பார்ப்போம்....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  7. அருமையான பழைய நினைவுகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மலரும் நினைவுகளாய் மலர்ந்த கவிதை மணம் வீசுகிறது! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  9. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  10. கிராமத்திற்க்கு சென்று திரும்பினேன்...நன்றி!!!

    பதிலளிநீக்கு
  11. அந்த நாள் நினைவுகள் வந்து மனதை மகிழ வைத்துவிட்டு இனி மூண்டும் வராதா என்று ஏங்கவும் வைத்து விட்டது.
    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு