வெள்ளி, 5 அக்டோபர், 2012

உதயம்! காரஞ்சன்(சேஷ்)
உதயம்!உலகைச் சுற்றுவதால்
உண்டான களைப்போ?
                                                         விழிகள் சிவக்க
                                                         விழித்தெழுகின்றாய்!

              
                                                 
                                                         அலைக்கரங்களில்
                                                         அகப்பட்ட பந்தோ?
                                                          கடலிடைக் கதிரவன்!

-காரஞ்சன்(சேஷ்)
(படங்களும் கவிதையும்)

24 கருத்துகள்:

 1. இந்தா பிடியுங்கள்
  பாட்டுக்கு எதிர் பாட்டு
  (எதிரி பாட்டாக
  கொள்ளவேண்டாம்)

  உலகம் சுற்றுவதால்
  வந்த களைப்பல்ல
  என் விழிகள் சிவக்க

  ஏன் எனில் உலகங்கள்தான்
  என்னை சுற்றுகின்றன
  என்பதை நீஅறியாயோ?

  என்னிடமிருந்து எல்லாவற்றையும்
  பெற்றுக்கொண்டு
  என்னை வணங்காமல்
  எதை எதையோ
  யார் யாறோரின் காலடியில்
  அற்ப ஆசைகளுக்காக
  அற்ப சுகங்களுக்காக
  தலை வணங்கி
  அலைந்து
  திரியும் மூடர்களை
  காணும் போது
  என் கண்கள் சிவக்கின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அற்ப சுகங்களுக்காக
   தலை வணங்கி
   அலைந்து
   திரியும் மூடர்களை
   காணும் போது
   என் கண்கள் சிவக்கின்றன //

   உண்மைதான்! எதிர் பாட்டை இரசித்தேன்!

   நீக்கு
 2. தங்களின் வருகை மிக மகிழ்வளித்தது நண்பரே! நன்றி!

  பதிலளிநீக்கு
 3. எதிர்ப்பாட்டு உம்
  மனதிற்கு
  இடர்பாட்டை தந்திடுமோ
  என்று பயந்தேன்

  நீங்கள் ரசித்தேன்
  என்றதும்
  என் காதில்
  பாய்ந்தது
  இன்பத்தேன்

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களே குறிப்பிட்டு விட்டீர்கள்-எதிரிப் பாட்டல்ல என்று! கற்பனையில் விளைவதுதானே கவிதை! இரசிக்கும்படி இருந்தது தங்களின் கருத்தும்! வருகைக்கு நன்றி!

   நீக்கு
 4. படங்களுக்கேற்ற வரிகள்... ரசித்தேன் ஐயா...

  எதிர்ப்பாட்டும் அருமை...

  நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 5. எதிர் பாட்டு மிக அருமை.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் இரசித்து இட்ட கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு
 6. அருமை. பாட்டுக்கு ஏத்த படமா? அல்லது படத்திற்காக பாட்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடற்கரையில் கண்ட காட்சியைப் படமெடுத்தபோது சிந்தனையில் தோன்றிய வரிகளுடன் பகிர்ந்துள்ளேன்! தங்களின் வரவுக்கு நன்றி!

   நீக்கு
 7. படமும் அதற்கான அருமையான
  விளக்கமாக அமைந்த கவிதையும்
  மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. அரைக்க அரைக்க
  மணக்கும் சந்தனம் போல்
  சுவைக்க சுவைக்க
  இன்பம் தருவது தமிழ்

  வெங்காயத்தை அரிவதால்
  கண்களிலில் கசியும் நீரைப்போல்
  நம் பண்டைய தமிழ்
  புலவர்களின் பாடல்
  வரிகளை படித்தால் நம்
  கண்களிலும் நீர் கசியும்

  சில கண்ணீர் ஆனந்தத்தில்
  வடியும் சில சமயம்
  இதயம் கனத்துபோவதால்
  கண்களில் நீர் பெருகும்.

  கல்லாக இருக்கும் நம் இதயம்
  மெல்லமெல்ல இளகும்

  தன்னை தான் இன்புறவே
  ஒரு தந்திரம் சொல்லுவாய்
  நிலாவே என்றான் பாரதி

  அதற்க்கு எளிய வழி
  பண்டைய தமிழ் நூல்களை
  சுவைப்பதுதான்.

  பதிலளிநீக்கு
 9. படங்களும் பொருத்தமான கவிதைகளும் மிகவும் சுவாரசியமா இருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு