வெள்ளி, 12 அக்டோபர், 2012

பனிக்கொடை -காரஞ்சன்(சேஷ்)


                                                        
                                                         
                                                              பனிக்கொடை!

காலைப்பனி என்ன
கர்ண பரம்பரையோ?

மறைகின்ற தருணத்தும்
தன்துளிகள் அனைத்தையும்
தாவரங்களின் வழியே
தாரைவார்க்கிறதே பூமிக்கு!

                                     -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

26 கருத்துகள்:

 1. மறைகின்ற தருணத்தும்
  தன்துளிகள் அனைத்தையும்
  தாவரங்களின் வழியே
  தாரைவார்க்கிறதே பூமிக்கு!


  பனியில் குளிர்ந்த அருமையான பகிர்வு...

  பதிலளிநீக்கு
 2. தங்களின் வலைப்பூ முகவரியைத் தெரிவிக்க வேண்டுகிறேன்! வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. ஆஹா என்ன எழுத்து வீரியம் காலைப்பனியை உணர முடிகிரது

  பதிலளிநீக்கு
 4. கர்ணன் தர்மம் செய்து
  புண்ணியம் சேர்த்தான்
  அந்த புண்ணியத்தை
  கண்ணன் எடுத்துக்கொண்டான்
  அவன் விடுதலை பெற

  கதிரவனின் வெப்பத்தால்
  பகலில் ஆவியானது நீர்
  நிலவின் குளிர்ச்சியில்
  பனித்துளியாகமலர்ந்து
  தன் பிறந்தகம் நோக்கி
  வழிந்தோடுகிறது மகிழ்ச்சியில்

  அனைத்திற்கும் காரணம்
  அந்த கதிரவந்தான்
  என்பதை யாரறிவார்?

  பதிலளிநீக்கு
 5. வருகையும் கருத்துரையும் மகிழ்வித்தது! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 6. தினம் ஒரு கவிதை. அதற்கு தொடர்ச்சியாக நான்கு மெயில்கள்.
  ஏ.ஸி. அறையில் பனிக்கொடையும் சேர்ந்து மிகவும் குளிர வைக்கிறது. கடும் கம்பளியைப் போர்த்திகொள்ளலாம் என்றால் மின்தடையினால் எரிச்சல் ஏற்படுத்துகிறது.

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 7. படமும் அதற்கான விளக்கமாக அமைந்த கவிதையும்
  அருமையிலும் அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. அந்த பனித்துளி கர்ணனாக மாற உதவியதும்
  கர்ண பரம்பரைதான் . . ஞாயிறுதான் . . .
  நன்று .. தொடரட்டும் உங்கள் பார்வைகள் . . .

  பதிலளிநீக்கு
 9. அருமையான கவிதை.....

  பூமிக்கு என்பதை பூமித்தாய்க்கு! என்று முடித்திருக்கலாமோ?

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகைக்கு நன்றி! "நிலவும் வானும்" புதிய கவிதை ஒன்றைப் பகிர்ந்துள்ளேன்! நன்றி!

  பதிலளிநீக்கு