நம்பிக்கைக் கீற்று!
நாற்றங்கால் சேற்றினில்
நாற்றின் கைகளிலே நாற்று!
வறுமை வாட்டிடினும்
வற்றாது அன்பெனும் ஊற்று!
விளைநிலங்களை எல்லாம்
வீடாக்க விற்பவரைத் தூற்று!
நிலமகள் அருளென்றும்
உழவுக்கு உண்டென்று தேற்று!
வரப்புயரந்தால் நாட்டின்
வளமுயரும்! ஓளவையின் கூற்று!
உழவன் பசியொடு
உலகிற்குச் சோறிடும் நிலை மாற்று!
உழவின் பெருமையை
உலகம் உணர்ந்திடப் பறைசாற்று!
வளம்பெறும் உழவென
உணர்த்திடும் நீயொரு நம்பிக்கைக்கீற்று!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: திருமதி சசிகலா அவர்களின் வலைப்பூ!
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வாழ்த்துரைக்கு நன்றி!
பதிலளிநீக்குunmai !
பதிலளிநீக்குazhakaana varikal!
thank you!
நீக்குஉழவன் முன்னேற, விவசாயம் வளம் பெற வேண்டி படைக்கப்பட்ட அழகிய படைப்பு ..
பதிலளிநீக்குநற்கவிதை , இதெல்லாம் நடந்தேறினால் இன்னும் இன்பம் பெருகும் .. எங்கே அதற்கான அறிகுறி தெரிவதாய் இல்லை ..
நம்பிக்கையோடு இருப்போம்
நம்புவோம் தோழரே! நன்றி!
நீக்குஉழவின் பெருமையை
பதிலளிநீக்குஉலகம் உணர்ந்திடப் பறைசாற்ற...
உண்பதற்கு உணவு வேண்டும் என்கிற எண்ணமாவது முதலில் வரட்டும் நல்ல பகிர்வுங்க.
தங்களின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி!
நீக்கு//உழவன் பசியொடு
பதிலளிநீக்குஉலகிற்குச் சோறிடும் நிலை மாற்று!//
உண்மை.இந்நிலை மாறவேண்டும். அருமையான வரிகள்.அழகான கவிதை.
நன்றி நண்பரே!
நீக்குநல்லதொரு கவிதை..
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
பதிலளிநீக்குகற்பனை நன்றாக உள்ளது
னால் உண்மை
என்னவென்று அறியீரோ?
அன்று நிலங்களில் நீரை தேக்கி
வேளாண்மை செய்து உணவு பொருட்களை
உற்பத்தி செய்து மக்களின் பசியை போக்கினர்
இன்று நிலங்களை எல்லாம் வீடுகளாக்கி
நிலத்தில் தொட்டிகளைகட்டி கழிவு நீரை தேக்கி
கொசுக்களை உற்பத்தி செய்து
நோய்களை பரப்புகின்றனர்
அன்று நிலங்களை உழுத உழவர்கள்
கிழவர்களாகிவிட்டனர்
அவர்கள் உழுத கலப்பை
இன்று ஒரு அரசியல்
கட்சியின் சின்னமாகிவிட்டது
உயிர் காக்க பயிர் செய்தவன்
உயிர் காக்க எந்த
அரசும் முயலவில்லை
தாழ்வுற்று நின்று போன
அவர்கள் வாழ்வை
மேலேற்ற உதவவில்லை
விவசாயிக்கு நாட்டில் மதிப்பில்லை
அவன் வாழ்வுக்கும் அவன் பயிரிடும்
பயிருக்கும் நல்ல விலையுமில்லை
பாதுகாப்புமில்லை.உத்தரவாதமுமில்லை
யாரிடமும் எதையும் எதிர்பாராமல்
இயற்கை உரம் பயன்படுத்தி மிடுக்கோடு
விவசாயம் செய்தான்
அந்த நாள் விவசாயி அன்று
விதைகளுக்கும் ரசாயன உரத்திற்கும்
பூச்சி கொல்லிகளுக்கும்,நீருக்கும்
மின்சாரத்திற்கும் அரசினை
எதிர்பார்த்து எதுவும் கிடைக்காது
ஏமாந்து ஏமாந்து மாண்டு போகும்
இந்நாளைய விவசாயியின்
அவலம்தான் இன்று
விவசாயிகள்இடுபொருட்களின்
விலையை கருத்தில் கொள்ளாது
அவர்கள் வாழ்வை அழித்து
தரகர்கள் தம்போக்கிற்க்கு
நிர்ணயிக்கிறார்கள் விலைகளை
தங்கள் வாழ்க்கை தரம் உயர
பயிர்களை நாசம் செய்யும்
பெருச்சாளிகள் நிலத்தில்
நாட்டில் அரசின் உதவிகளை
அவர்களுக்கு சேர்க்காமல்
அப்படியே கபளீகரம் செய்கிறார்கள்
ஊழல் பெருச்சாளிகள்
ஒருபுறம் உணவு பஞ்சம்
ஒரு புறமோ உணவு கிடங்குகளில்
டன் கணக்காக உணவுபொருட்கள்
மக்கி வீணாகும் அவலம்
மறுபுறமோ மக்கள் பட்டினியில்
சிக்கி மடியும் பரிதாபம்
கண்டும் காணா அரசுகள்
எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
இந்நிலை மாறுமோ ?
உண்மையான ஆதங்கம்! என்னுடைய மே மாத பதிவுகளில்
நீக்கு"கனவு மெய்ப்பட வேண்டும்" இடுகையைப் படிக்க வேண்டுகிறேன்!
http://esseshadri.blogspot.in/2012/05/blog-post.html?showComment=1349703038878
நன்றி!
சிறப்பான கவிதை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றீ ஐயா!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அர்த்தமுள்ள கவிதை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்!
நீக்குஅருமையான அர்த்தம் பொதிந்த கவிதை. வாழ்த்துகள் நண்பரே.
பதிலளிநீக்குதங்களின் வரவால் மகிழ்ந்தேன்! நன்றி!
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி.
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
நாற்றின் கைகளிலே நாற்று!
பதிலளிநீக்குநம்பிக்கைக்கீற்றாய் அருமையான கவிதைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
தங்களின் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்கு-காரஞ்சன்(சேஷ்)
அருமை சார் . தொடருங்கள் மென் மேலும்
பதிலளிநீக்குமுகுந்தன்
நன்றி முகுந்தன்!
நீக்குநம்பிக்கையூட்டும் நல்ல கவிதைக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குநாற்றங்கால் சேற்றினில்
பதிலளிநீக்குநாற்றின் கைகளிலே நாற்று!//
நம்பிக்கை கீற்று தெரிகிறது உழவு தொழில் முற்றிலும் அழிந்திடாது.
உழவு தொழிலின் உன்னதத்தை சொல்லும் கவிதை அருமை.
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!
நீக்குஅன்பெனும் ஊற்று! அருமை !
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குஅன்புடையீர்! வணக்கம்!
பதிலளிநீக்குஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (12/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
இன்று வலைச்சரத்தில் வை.கோபாலகிருஷ்ணன் தங்களைப் பற்றி விவாதித்துள்ளார். வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைக்கும்போது எனது வலைப்பூ பக்கங்களுக்கு வருக.
பதிலளிநீக்குhttp://ponnibuddha.blogspot.com/
http://drbjambulingam.blogspot.com/
அன்புடையீர்,
பதிலளிநீக்குவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/13.html