படைப்பு!
படைத்தவனோ….
கொடியிடைதாளா
வடிவு தந்தெம்மை
உருளவிட்டான்
தரையினிலே!
படைப்பவனோ …
பூசை முடிவினிலே
ஓசைவர ஓங்கிஎமை
உடைக்கின்றான்
சாலையிலே!
உருளுகின்றார்
பலர்தரையில்!
உருளுகிறது எம்தலைதான்
உருள்பவரின் மத்தியிலும்!
உடைபடவா பிறந்தோம்?
உரிய இடமளித்தால்
இடருண்டோ எம்மாலே?
இக்கணமே சிந்திப்பீர்!
-காரஞ்சன்(சேஷ்)பட உதவி: கூகிளுக்கு நன்றி!
சரியான கேள்வியைத் தான் கேட்டிருக்கிறது பூசணி!
பதிலளிநீக்குநல்ல கவிதை நண்பரே. பாராட்டுகள்.
தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஉடைந்தழும் என்னாலே
பதிலளிநீக்குஉருளுகின்றார் பலர்தரையில்!
உடலுக்கு நலமான காயை உடைப்பது நலமோ? அதனாலும் மண்டை உடைபடுவதும் தகுமோ?
நேற்றைய தினம் பயணம் செய்யும்போது சாலையெங்கும் உடைக்கப்பட்ட பூசணிக்காய்களைக் காண நேர்ந்தது! அதன் வெளிப்பாடுதான் இக்கவிதை!
பதிலளிநீக்குஆயுதபூசை படைப்போ?
பதிலளிநீக்குகாலத்திற்கேற்ற கவிதை! தொடரட்டும்!
தங்களின் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்குஉண்பதற்கும் அதே கடா தான்
பதிலளிநீக்குகோயிலில் பலியிடுவதர்க்கும்
அதே கடா தான்
ஒரு பலி இன்னொரு பலியை கேட்கிறது
பலி கொடுக்கும்போது வலி தெரியாது
பலியாகும்போதுதான் வலி தெரியும்
கோயில் பூசாரி வெட்டினால்
உயிர் இறைவனிடம் போகும்
உடல் வயிற்ருக்குள் போகும்
கசாப்பு கடையில் வெட்டினால்
உயிர் வெட்டுபவரின் உணவாக
அவர் வயிற்ருக்குள் போகும்
இதுதான் இந்த உலகில்
வழங்கி வரும் மரபு
மரபுகளை மாற்ற முடியாது
மரபுகள் மாற மனதில்
மாற்றம் தேவை
தங்களின் கருத்துரைக்கு நன்றி ஐயா!
நீக்குநல்லதொரு விழிப்புணர்வு கவிதை! சிந்திக்க வேண்டிய விசயம்! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குArumaiyana thinking . nice sir
பதிலளிநீக்குMugundan
உடைபடவா பிறந்தோம்?
பதிலளிநீக்குஉரிய இடமளித்தால்
இடருண்டோ எம்மாலே?
இக்கணமே சிந்திப்பீர்!
சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்தால் நல்லது
உண்மைதான்! தங்களின் வருகைக்கு நன்றி!
நீக்குவல்லவருக்கு புல்லும் ஆயுதம்
பதிலளிநீக்குஎன்பது சரிதான்
எதையும் அருமையான கவியாக்கிவிடும்
உங்கள் திறம் கண்டு வியக்கிறேன்
மனம் கவர்ந்த சிந்தனை,கவிதை
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வரவு மகிழ்வளித்தது! நன்றி!
பதிலளிநீக்கு-சிந்தனைக் கவிதை !
பதிலளிநீக்குதங்களின் வரவிற்கு நன்றி!
நீக்குசிந்தனைக் கவிதை அருமை... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குநன்றி...
தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!
பதிலளிநீக்குஎளிய வரிகளில் புதிய சிந்தனை .. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
பதிலளிநீக்குநன்றி ஐயா!
பதிலளிநீக்கு