செவ்வாய், 9 அக்டோபர், 2012

வீதி விளக்கு-விதிவிலக்கு! -காரஞ்சன்(சேஷ்)விதிவிலக்கு!

இரவெலாம் விழித்து
பகலெலாம் உறங்கிடும்
தெருவிளக்கு!

இரவோடு பகலிலும்
எரிந்திடும் விளக்கோ
விதிவிலக்கு!

                                   -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி

17 கருத்துகள்:

 1. அருமை அருமை
  விதிவிலக்கான
  வீதி விளக்கு குறித்த
  கூர்மையான வித்தியாசமான சிந்தனையும்
  கவிதையும் உள்ளம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வீதி விளக்கும் விதி விலக்கும் அருமை.

  பகலோ இரவோ மின்தடைகளால் எரியாத விளக்குகள்
  நம் தலைவிதியின் விளக்குகளோ?

  அவற்றையும் குறிப்பிட்டிருக்கலாமே!

  பாராட்டுக்கள்.

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 3. மின்சாரம் பற்றாக்குறை உள்ள காலத்திலும் சில இடங்களில் இதுபோன்ற காட்சிகளைக் காணநேர்வதன் வெளிப்பாடே இக்கவிதை ஐயா! தங்களின் வருகை மகிழ்வளித்தது.நன்றி!

  பதிலளிநீக்கு
 4. சார், இது போன்று இன்னும் பல சமூக அவலங்கள்/விதிமீறல்கள் தினமும் அரங்கேறிகொன்று தான் இருக்கிறது .பார்க்கிற நம்மால் தான் ஒன்றும் செய்ய முடயாத நிலை.மின்துறை நண்பர்களின் பார்வையில் இந்த கவிதை பட்டு நல்லது நடந்தால் நன்றாக இருக்கும்.

  முகுந்தன்

  பதிலளிநீக்கு
 5. விதிவிலக்கு கவிதை - விதிவிலக்கு உண்மையிலேயே
  தனிமை கவிதைக்கு தந்திருக்கும் படம் இளையராசா ஓவியம் போல் இருக்கிறது ..
  அருமை . . .தொடரட்டும் ...

  பதிலளிநீக்கு
 6. விதி விலக்கு!

  வீதி விளக்கு-விதிவிலக்கு!  விளக்கமான் விளக்குகள் !

  பதிலளிநீக்கு
 7. நல்ல ஒப்பிடல்.
  கவிதை வரிகளைக் கூட்டுவது இன்னும் இனிமை தருமன்றோ!
  முயற்சி செய்யலாம்!
  இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு