புதன், 24 அக்டோபர், 2012

உறவுகள் தொடர்கதை!- காரஞ்சன்(சேஷ்)

                                                உறவுகள் தொடர்கதை!


ஏதோ ஒரு பறவையின்
எச்சம்வழி  வீழ்ந்தவித்தில்
விளைவனதான் விருட்சங்கள்!

பரந்தடர்ந்த கிளைகளிலே
பழங்கள் நிறைந்திருக்க
பறவைகளை வரவேற்று
பசிதீர்க்கும் நன்றியொடு!

பசிதீர்ந்த பறவைகளால்
பல்கட்டும் நல்விருட்சம்!

-காரஞ்சன்(சேஷ்)

11 கருத்துகள்:

 1. படத்திற்கேற்ற அருமையான வரிகள்...

  வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. தரையில் வீழ்ந்த போதும்
  தளர்ந்துவிடாமல் மண்ணில் வேரூன்றி
  முளைத்து தழைக்கும் விருட்சங்களை
  பார்த்து தற்கொலைக்கு விழையும்
  கோழை மனிதர்கள் இந்த
  நிகழ்விலிருந்து பாடம்
  கற்றுக்கொள்ளவேண்டும்

  சிந்தனையை தூண்டி
  விட்ட சிறப்பு உம்மை சேரும்

  பதிலளிநீக்கு
 3. பசிதீர்ந்த பறவைகளால்
  பல்கட்டும் நல்விருட்சம்!
  \\\அருமையான சிந்தனை உண்மையான கருத்து

  பதிலளிநீக்கு
 4. பல்கட்டும் நல்விருட்சம்....

  சிறப்பான சிந்தனை.

  பாராட்டுகள் நண்பரே.

  பதிலளிநீக்கு
 5. படமும் பொருத்தமான கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு