வியாழன், 11 அக்டோபர், 2012

இதயத்தில் நீ !- காரஞ்சன்(சேஷ்)

                                                       
                                                                      இதயத்தில் நீ!

முதியவளின் முகத்தினிலே
உவகைபொங்கும் காட்சி
ஊற்றெடுத்த அன்புள்ளம்
உள்ளதற்கு சாட்சி!

இருக்கின்றாய் இங்கென்று
வலக்கரத்தால் காட்டும்
இளைஞர்போல் இருக்கிறதே
முதியவரின் தோற்றம்!

அகம் குளிர்விப்பவரின்
அங்கம் குளிர்விக்க
அகழ்கிணற்றின் நீர்முகந்து
ஊற்று நீர் ஊற்று!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

30 கருத்துகள்:

  1. மிகவும் ரசித்த படம். முன்பே பார்த்திருந்த படத்திற்கு உங்கள் மூலம் ஒரு கவிதை..... வாழ்த்துகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கருத்துரை மகிழ்வளிக்கிறது! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. அகம் குளிர்விப்பவரின்
    அங்கம் குளிர்விக்க
    அகழ்கிணற்றின் நீர்முகந்து
    ஊற்று நீர் ஊற்று!//

    கடைசி மூன்று வார்த்தைகள் மிக அருமை.

    “ஊற்று நீர் ஊற்று”
    ”அதை நீர்* ஊற்று”

    என்றும் [நீர்*=நீ என்ற பொருளில்] சொல்லியிருக்கலாமோ?

    VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா,
      நான் எழுதும்போது ஊற்று நீ(ர்) ஊற்று என எழுதி பின்னர் மாற்றினேன்!தங்களின் கருத்துரை கண்டு வியந்தேன்! நன்றி!

      நீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  5. இதமான கவிதை ..
    இனிமை கூட்டும் படத்துடன் ..
    வாழ்த்துக்கள் தோழரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! விதிவிலக்கு கவிதையை நேரம் கிடைக்கையில் பார்க்க வேண்டுகிறேன்! நன்றி!

      நீக்கு
  6. ஈரமான கவிதை . .
    ஆனால்
    நெஞ்சின் உரம் சொல்லும் கவிதை . . .

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் கருத்துரை மகிழ்வளித்தது! நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  8. இரண்டுமே (படமும், வரிகளும்) அருமை... குளிர்வித்தது வரிகள்...

    பதிலளிநீக்கு
  9. சின்ன வரிகளில் சிங்காரமே பூத்தது போல் உள்ளது

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. தன் பெற்றோரை விட்டு
    தன்னை நம்பி வாழ
    வந்தவளிடம் மணந்த
    நாள் முதல் அன்பை விதைத்தால்
    அது முதுமையிலும் வற்றாது
    இதுபோல் தொடரும்

    படமும் கவிதையும் அருமை

    பதிலளிநீக்கு
  12. உண்மை! தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. அகம் குளிர்விப்பவரின்
    அங்கம் குளிர்விக்க
    அழகான வரிகள் . எத்தனை வயதானாலும் அகத்தானால் மட்டுமே அகத்தை மகிழ்விக்க முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகத்தின் அழகு (Pure love)
      முகத்தில் தெரியும் (computer screen)
      அகத்தின் அசைவுகள்(software)
      அங்கத்தின் அசைவுகள்(hard ware)

      நீக்கு
  14. அகம் குளிர்விக்கும் அருமையான வரிகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  15. படமும் , அதற்கு பொருத்தமாய் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  16. ஊற்றெடுத்த அன்புள்ளம்
    உள்ளதற்கு சாட்சி!


    ஊற்றெடுக்கும் அன்ப்புப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு