சனி, 14 ஜூலை, 2012

புன்னகைப்(பூ)க்காரி!

புன்னகைப்பூக்காரி!


மல்லிப்பூ, ........சாமந்தி,...... ரோஜா...
வலிக்காதோ வாயெனவே
எண்ணிடும் வண்ணம்
ஒலித்தபடி வருகின்றாள்!

எதிர்த்த தெருநாய்கள்
இப்போதெல்லாம்
ஏனோ குரைப்பதில்லை!
வறியவளின் நிலையுணர்ந்து
வாய்மூடி நின்றனவோ?

எத்தனைமுறை உரைத்தும்
ஏனோ கேளாமல்
அடித்திடுவாள் பலதடவை
அழைப்பு மணியினையே!


நடைப் பயணம் வாட்டியதோ?
வாடினவே  பூச்சரங்கள்!
வாங்க வில்லையெனில்
வாடிடும் அவள்முகமும்!

ஓரிரு முழப்பூவும்
உதிர்கின்ற இதழ்களுடன்
ஒருசில ரோஜாக்கள்
கையிலே திணித்து
காசைப் பெறுகையிலே-அவள்
உதிர்க்கின்ற புன்னகை
உரைத்திடுதே அவள்நிலையை!


-காரஞ்சன்(சேஷ்)

14 கருத்துகள்:

  1. பூப்போல மலர்ந்து புன்னகை புரிய வைக்கும் அழகான கவிதை இது. அற்புதமான படைப்பு. வாழ்த்துகள்.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள், நண்பரே! vgk

    பதிலளிநீக்கு
  2. பூவையரின் நெஞ்சமதில் புதைந்த எண்ணங்களை கவியாக்கிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை. வாழ்த்துகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. நல்ல கவிதை.. வாழ்த்துக்கள் நண்பரே :)

    பதிலளிநீக்கு
  5. அழகான கவிதை...
    பகிர்வுக்கு நன்றி...
    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவும் வாழ்த்துக்களும் மகிழ்வளிக்கிறது! நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  6. இயல்பான வரிகளில் கூறிய விதம் கண்ணுள் நிழலாடும் சிறந்த படைப்பு .. பாராட்டுக்கள் சார்

    பதிலளிநீக்கு