வெள்ளி, 11 ஜனவரி, 2013

விதியின் கோடு!- காரஞ்சன்(சேஷ்)                                      விதியின் கோடு!
ஆழ உழுததற்கு
அடையாள வரிகளாய்
அகன்ற நிலமெங்கும்
உழவின் கோடுகள்!
நிலத்தினில் சாட்சியாய்
நின்றிருக்கும் மரமே-நீ
இயற்கை அன்னையிடம்
எங்கள் நிலை கூறாயோ?
எழுதும் விதிக்கரங்கள்
இரக்கம் கொள்ளாதோ?
உழுபவர் நிலைஉயர
ஒருகோடு வரையாதோ?   
                           -காரஞ்சன்(சேஷ்) 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை. 

20 கருத்துகள்:

 1. படமும் பொருத்தமான கவிதையும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். உழுபவருக்கே நிலம் என்பதெல்லாம் சும்மா வாய் வார்த்தைக்குத்தானோ?

  பதிலளிநீக்கு
 2. தங்களின் வருகைக்கு நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. படமும் படத்திற்கு ஏற்ற கவிதையும் பிரமாதம் சேஷாத்ரி. உழுபவர் நிலை உயர கோடு வரைவதற்குத் தான் யாருமில்லை :(

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான்! தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. விவசாயிகளின் மனதறிந்த நீங்க வாழ்க,ஆனாலும் பாவம் .

  பதிலளிநீக்கு
 6. உழுபவர் நிலைஉயர
  ஒருகோடு வரையாதோ?

  ஆதங்க வரிகள்..

  பதிலளிநீக்கு
 7. உழவர்களின் நிலையை புரிந்து வச்சுறிகிங்க......உங்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்திற்கு நன்றி பல! தங்களுக்கும் என் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 8. தங்களின் வாழ்த்திற்கு நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

 9. உழுபவர் நிலைஉயர
  ஒருகோடு வரையாதோ? //

  படக்கவிதை அருமை.

  உழவரின் நிலை உயர வாழ்த்துக்கள்.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 10. கருத்துள்ள கவிதை! பொருத்தமான புகைப்படம்! பாராட்டு பெறும் பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

   நீக்கு
 11. உழுபவரின் நிலை உயர வேண்டும்...

  படமும், வரிகளும் அருமை.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! பொங்கல் வாழ்த்திற்கு நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

   நீக்கு
 12. நல்லதொரு இந்தக் கவிதை மழையால்
  அவ்வப்போது மழை வந்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு