இந்த ஒளிப்படத்திற்கு இரு கவிதைகள் எழுதியுள்ளேன்.
தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து செல்ல வேண்டுகிறேன்.
கவிதை-1
ஒன்றிய உள்ளங்கள்
ஒன்றாய் அருகருகே!
பற்பல நினைவுகளை
பார்வைகள் பரிமாற
விழிகளின் மொழிதனையே
விளக்க ஒருமொழி
எதற்கு?
அகத்தின் முகவுரையாய்
அரும்பிடுதோ புன்னகையும்!
கவிதை 2
நகையரும்பும் முகங்களிலே
நம்பிக்கை ஒளிக்கீற்று!
அகங்களின் நினைவுகளை
அவ்விருவர் விழிபேச
விழிமொழி அறிந்திடவே
விழையுதம்மா செம்மொழியும்!
அகத்தின் மகிழ்வாலே
முகத்தில் புன்னகையோ?
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு நன்றி: நம் உரத்த சிந்தனை மாத இதழ்.
