ஒற்றைப் பறவை!
தனிமைநாடும் வேளைகளில்
சுற்றித் திரியும்
ஒற்றைப் பறவையிடம்
ஒட்டிக் கொள்கிறது
மனம்!
வெளிச்சம் பரவிய
விரிந்த வானில்
விருப்பம்போல்
வட்டமிடும்
ஒற்றைப் பறவை!
வழி மாறியதோ?
மோனநிலையில்
முள்மரத்தின் மீது
ஒரு பறவை!
வலி மிகுந்ததோ?





