விளை (லை) நிலம்!
விளைச்சலின்றிப்போன
விளைநிலம்
மேய்ச்சல் நிலமானது!
வீட்டுமனைக்காக
விற்பனை ஆனது!
புதுமனை புகுவிழாவிற்கு
விவசாயி தன் பசுவுடன்!
வீட்டுற்குள் சென்றுவந்த
பசுமாட்டின் கண்களில்
கண்ணீர்!
மேய்ச்சல் நிலத்தின்
மேலெழுந்த வீடென்பதாலோ?
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!