2015 புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2015 புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜனவரி, 2015

புத்தாண்டே வருக! வருக!-புத்தாண்டு நல்வாழ்த்துகள்!-காரஞ்சன்(சேஷ்)






வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஊற்றுநீர் உயர்ந்து ஊர்கள் தழைத்திடவே
சேற்று வயல்களெலாம் செந்நெல் விளைந்திடவே
வேற்று கிரகங்களுக்கு விண்கலன்கள் விரைந்திடவே
குற்றங்கள் குறைந்து நல் மாற்றம் விளைந்திடவே
காற்றின் மாசகற்றி கடும்பிணி ஒழிந்திடவே
மாற்றங்கள் விளைவித்து ஏற்றங்கள் சேர்த்திடும்
ஈற்றினிலே மூவைந்தை ஏந்திவரும் புத்தாண்டே!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!