ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

ஏதோ நினைவுகள்..கனவுகள் -காரஞ்சன்

கனவுகள்!

மூடிய இமைகளுக்குள்
ஓடிடும் கனவலைகள்!

ஆழ்மன ஆசைகளும்
அரும்பிடுமே கனவுகளாய்!

எல்லையிலா கனவுலகை
எட்டிடுமே மனப்பறவை
கற்பனைச் சிறகடித்து!

வாழ்வைத் திட்டமிட
வாய்ப்பாகும் கனவுகளும்!

உள்ளத்தின் உயர்வே
ஒருவரின் உயர்வாம்
வள்ளுவரின் வாக்கினிலே!

வேதனை எனும்பனி
விலகுவதாய்க் கனவமைக!

அன்புளம் பெருகி- அமைதி
நிலவுவதாய்க் கனவமைக!

வன்முறை அகன்று- நாடு
வளம்பெறவே கனவமைக!

எண்ணிய எண்ணியாங்கு
எய்துவதாய்க் கனவமைக!

திண்ணிய மனதுடனே
தினமும் முயன்றிட்டால்...

நினைவே கனவாகும்!
கனவும் நினைவாகும்!

                                                    -காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

5 கருத்துகள்:

 1. //திண்ணிய மனதுடனே
  தினமும் முயன்றிட்டால்...

  நினைவே கனவாகும்!
  கனவும் நினைவாகும்!//

  அருமை ;)))))

  பதிலளிநீக்கு
 2. //எண்ணிய எண்ணியாங்கு
  எய்துவதாய்க் கனவமைக!

  திண்ணிய மனதுடனே
  தினமும் முயன்றிட்டால்...

  நினைவே கனவாகும்!
  கனவும் நினைவாகும்!//

  நிச்சயம் கனவு நினைவாகட்டும்...

  நல்ல கவிதை வரிகள் நண்பரே.... தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 3. திண்ணிய மனதுடனே
  தினமும் முயன்றிட்டால்...

  நினைவே கனவாகும்!
  கனவும் நினைவாகும்!

  அருமையான கனவும் தொடர
  இதுபோல் அருமையான கவிதையும் தொடர
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. நினைவே கனவாகும்!
  கனவும் நினைவாகும்!
  முடிவு அருமை ஐயா..அதுதான் உண்மை..

  பதிலளிநீக்கு