புதன், 15 பிப்ரவரி, 2012

நண்பருக்கு நன்றி! -காரஞ்சன்(சேஷ்)

வணக்கம்!

வலைப்பூ தொடங்கி மூன்று மாதங்களில் என் மனதில் தோன்றிய சிந்தனைகளை கவிதைகளாகவும், கட்டுரையாகவும் வெளியிட்டேன். பின்னூட்டங்கள் மேலும் ஊக்கமளித்தது என்பதில் ஐயமில்லை! இந்தத் தருணத்தில் என்னை வலைப்பூ ஆரம்பிக்கத் தூண்டிய, என்னுடைய மாமனார் கவிஞர் கணக்காயன் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அவரால் "என் வலைப்பூவின் தந்தை" என பாராட்டப் பட்ட திரு வெங்கட்நாகராஜ் அவர்கள் எனக்கு “The Versatile Blogger Award” என்ற விருதினை வழங்கியுள்ளார்கள். அவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

பார்வை: http://venkatnagaraj.blogspot.in/2012/02/blog-post_14.html

எனக்குப் பிடித்த 7 விஷயங்கள்:

1. பிடித்த புத்தகங்களைப் படிப்பது.

2.என்னுடைய கிராமத்துக்குச் செல்லும்போதெல்லாம் ஆற்றுமணலில் 
   இயற்கையை இரசித்தபடி நடப்பது

3.மகளின் கவிதைகள் மற்றும் பாடல்களை இரசிப்பது.

4. நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது.

5. சைக்கிளில் அதிகாலை (அ) அந்திமாலையில் நெரிசலற்ற சாலையில் பயணிப்பது.

6.நண்பர்களுடன் படித்த, பார்த்த, இரசித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது

7. பாடல்களை சேகரிப்பது- முன்பு நிறைய ஒலிநாடாக்கள்- தற்போது கணினியிலேயே ஒரு வன்தட்டு முழுவதும்.

எனக்களித்த இந்த விருதினை கீழ்க்கண்ட பதிவர்களுக்கு அளித்து மகிழ விரும்புகிறேன்.

1.கவிஞர் கணக்காயன் அவர்கள்:

   http://kanakkayan.blogspot.in/

2. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்

   http://gopu1949.blogspot.in/

3.திரு இரத்தினவேல் நடராஜன் அவர்கள்

   http://rathnavel-natarajan.blogspot.in/

4. திரு அரசன் சே அவர்கள்

   http://karaiseraaalai.blogspot.in/

5.திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
http://dindiguldhanabalan.blogspot.in/

விருது வழங்கியவர்களுக்கு நன்றி! விருது பெறுபவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

என்றென்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)

16 கருத்துகள்:

 1. விருது பெற்றமைக்கும்
  தரமான பதிவர்களைத் தேர்ந்தெடுத்து
  அதனைப் பகிர்ந்து மகிழ்ந்தமைக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சார் ! முதலில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ! விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் ! எனது தொழில் பிசினஸ் என்பதால் அதிக பதிவுகள் எழுத முடிவதில்லை. இதில் எங்கள் ஊரில் மின்சாரம் மூன்று மணி நேரம் போகும் என்கிற நிலைமை போய், எத்தனை மணி நேரம் மின்சாரம் இருக்கும் என்கிற நிலைமை ஆகி விட்டது ! இருந்தாலும் உங்களின் விருது இன்னும் நிறைய எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது ! எழுதுவேன் ! மிக்க நன்றி சார் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி! எத்தனை பதிவு என்பது முக்கியமல்ல! என்னைப் பொறுத்தவரை எத்தகைய பதிவு என்பது தான்! தொடர்க உம் பதிவுகள்!
   நன்றி!
   காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 3. தாங்கள் விருது பெற்றதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்+வாழ்த்துகள்.

  எனக்கு THE VERSATILE BLOGGER AWARD என்ற விருதினை மீண்டும் தங்கள் மூலம் அளித்துள்ளதற்கு என் நன்றிகள்.

  [இதே விருது ஏற்கனவே திருமதி உஷா ஸ்ரீகுமார் என்பவரால் 04.02.2012 அன்று எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

  Please refer my earlier post Link: http://gopu1949.blogspot.in/2012/02/versatile-blogger-award.html இது தங்கள் தகவலுக்காக மட்டுமே]

  தங்கள் மூலம் இன்று விருதுகள் பெற்றுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 4. விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் பெற்ற அன்பர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. வருகைபுரிந்து வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா!
  அன்புடன்
  காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துகள் நண்பரே.... உங்கள் மூலம் விருது பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 7. மிக்க நன்றி.
  விருதை பெருமகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கிறேன்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. அன்பின் நண்பருக்கு என் வணக்கங்கள் ..
  தங்களின் விருதினை கண்டு பெரு மகிழ்வை அடைகிறேன் ..
  விருதுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன் ..

  பதிலளிநீக்கு