வியாழன், 1 நவம்பர், 2012

ஆதலின் மழையே!-காரஞ்சன்(சேஷ்) 
ஆதலின் மழையே!


பெய்யாமல் பொய்த்த
பருவழை-இவ்வாண்டு
பொய்க்காமல் பெய்ய
புயலொடு வந்ததுவோ?

நீலமெனும் பெயர்பெற்று
நிலைகொண்டது புயலொன்று!

 “நீலம்” தீண்டியதால்
நிறம் மாறிய வானம்
ஓயாமல் மழையென
உகுத்தது கண்ணீரை!

 கார்மேகம் முழுவதையும்
கடத்தியது சுழற்காற்று!
உடைந்தழுத மேகத்தால்
உண்டாச்சு அடைமழையும்!

சூழ்ந்த மழைநீரால்
பாழாகும் பயிர்கள்பல!
வீழ்ந்த கம்பங்களால்
விடைபெற்றது மின்சாரம்!

சாலைகளை அடைத்தன
சாய்ந்த பெருமரங்கள்!
அல்லலுடன் மக்கள்
அடைந்தனர் வீட்டிற்குள்!
 
"தானே" அளவிற்குத்-துயர்
தரவில்லை என்றாலும்
கரைகடக்கும் வரையில்
கலக்கமுற வைத்த புயல்!

மண்ணுக்கு அமுதம்
மழைத்துளி யாகும்!
விண்பொய்த்தாலோ
வியனுல கில்லை!
அளவில் மிகுந்திடின்
அமுதமும் நஞ்சே!
 
ஆதலின் மழையே....
அளவுடன் நல்கி-புவி
வளம்பெறச் செய்வாய்!
                                            -காரஞ்சன்(சேஷ்)

25 கருத்துகள்:

 1. நான் அளவின்றி கொடுப்பவன்
  அனைத்துலகமும் வாழ
  அனைத்துயிரும் பயன்பெற

  அதை உன் அறிவுகொண்டு
  செம்மையாக பயன்படுத்திகொள் .

  அறிவில்லாமல் நீ
  வீணடித்தால்அதற்க்கு
  நான் என்ன செய்ய?

  பதிலளிநீக்கு
 2. தானே புயல் . .
  நீலம் புயல் . . .
  பரவாயில்லை அல்லவா . . .
  கவிதை காற்றுக்கும் புரிகிறதோ ?

  பதிலளிநீக்கு
 3. என்ன கத்தினாலும் ஆட்சியாளர்களே கேட்க மாட்டேங்குறாங்க, இயற்கையாவது கேக்குதா என்று ஒரு கவி விண்ணப்பமாக எடுத்துக்கொள்கிறேன் சார்

  பதிலளிநீக்கு
 4. //உடைந்தழுத மேகத்தால்
  உண்டாச்சு அடைமழையும்!//

  சிறப்பான வார்த்தைப் பயன்பாடு.....

  சரியான நேரத்தில் சிறப்பான கவிதை.

  பதிலளிநீக்கு
 5. உண்மையாக எல்லோரும் விரும்பும்படி உள்ளது
  " ஆதலின் மழையே....
  அளவுடன் நல்கி-புவி
  வளம்பெறச் செய்வாய்!"

  பதிலளிநீக்கு
 6. ஆதலின் மழையே....
  அளவுடன் நல்கி-புவி
  வளம்பெறச் செய்வாய்!
  மிகவும் அழகான வரிகள்.

  பதிலளிநீக்கு

 7. ஆதலின் மழையே....
  அளவுடன் நல்கி-புவி
  வளம்பெறச் செய்வாய்!//

  நியாயமான வேண்டுதல்
  செவி சாய்க்குமா வானம் ?
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. ஆதலின் மழையே....
  அளவுடன் நல்கி-புவி
  வளம்பெறச் செய்வாய்!

  மடல் அனுப்பிய விதம் அழகு.

  பதிலளிநீக்கு
 9. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி! "தளரும் வயதில் மலரும் நினைவுகள்" என ஒரு பதிவு இட்டிருந்தேன்! படித்தீர்களா?

  பதிலளிநீக்கு
 10. இன்றைய நிலைமைக்கேற்ற நல்ல கவிதை... ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 11. //ஆதலின் மழையே....
  அளவுடன் நல்கி-புவி
  வளம்பெறச் செய்வாய்!//

  அழகான கோரிக்கை வரிகள்.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு