சனி, 31 ஆகஸ்ட், 2013

தென்னை! கவர்ந்தது என்னை! - காரஞ்சன்(சேஷ்)

 
                               
                         தென்னை கவர்ந்தது என்னை!

பெத்து வளர்த்ததெல்லாம்
சொத்தைப் பறிச்சுக்கிட்டு
சோறிட மறுக்கையிலே
வைச்சு வளத்தவங்க
வாரிசுக்கும் பயனளிச்சு
தன்னையே தருவதில்
தானுயர்ந்த தென்னை!

பாளைகள் படமெடுக்க
பசுங்குலைகள் அழகூட்ட
ஆரமென கீற்றிருக்க
அழகிய ஓர்வட்டம்!

வண்ணப் படத்தினிலே
வானுயர்ந்த தென்னை!
கண்டவுடன் கவிதைதர
கவர்ந்திழுத்த தென்னை!

-காரஞ்சன்(சேஷ்)

செய்தி: நன்றி-தினமலர் 31/8/2013
பட உதவி: மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு நன்றி!

16 கருத்துகள்:

 1. தென்னம்பிள்ளை நம் சொந்தப்பிள்ளையை விட நிச்சயமாக அதிகப்பலன் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

  தென்னையைப்பெற்றால் இளநீர்
  பிள்ளையைப்பெற்றால் கண்ணீர்

  நல்ல பகிர்வுக்கு ந்ன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. A big செ..படி, for useless(s)..fine words. ramanans

  பதிலளிநீக்கு

 3. பாளைகள் படமெடுக்க
  பசுங்குலைகள் அழகூட்ட
  ஆரமென கீற்றிருக்க
  அழகிய ஓர்வட்டம்!

  தென்னை! கவர்ந்தது என்னை!
  -அனைவரையும்தான் ..!

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி !

  பதிலளிநீக்கு
 5. ஆரமென கீற்றிருக்க
  அழகிய ஓர் வட்டம்...
  நன்று...வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே !

  பதிலளிநீக்கு
 7. பாளைகள் படமெடுக்க
  பசுங்குலைகள் அழகூட்ட
  ஆரமென கீற்றிருக்க
  அழகிய ஓர்வட்டம்!//

  கவிதை அருமை.
  ஆரமென கீற்றிருக்க அழகிய ஓர்வட்டம்
  பொருத்தமான படம்.

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 9. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி !

  பதிலளிநீக்கு
 10. புகைப்படமும் அதற்கான
  இன்றைய நிலை சொல்லிப் போகும்
  அருமையான கவிதையும்
  அருமையிலும் அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா !

  பதிலளிநீக்கு