சனி, 7 செப்டம்பர், 2013

பல்லாங்குழி! -காரஞ்சன்(சேஷ்)

                                                                    பல்லாங்குழி!


                                                                 
பாட்டியுடன் பெயர்த்தி
பல்லாங்குழி விளையாட
கடந்த காலங்கள் நம்
கண்முன் விரிகிறதே!

ஐந்து விரல்களுக்கும்
அதனாலே பலனுண்டு!
பசுவென்றும் கஞ்சியென்றும்
பலநிலைகள் அதிலுண்டு!

அந்நாளில்..

ஊடகங்கள் அதிகமில்லை
உறவுகள் அதிகமுண்டு!
கூடிக் களித்திருக்க
குழுமிய சிறார்களுண்டு!

விளையாடிக் களித்து
விரும்பிக் கதைகேட்டு
களைப்பின் மிகுதியில்
கண்வளர்ந்த காலமது!

முதிய தலைமுறைக்கு
கணினி விளையாட்டை
கற்பிக்கும் இந்நாளில்
இளைய தலைமுறை
இவற்றையும் விரும்பிடுமா?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

28 கருத்துகள்:

 1. அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! அருமை! ஆதங்கமும் ஞாயம்தான் ஐயா!

  பதிலளிநீக்கு
 2. முதிய தலைமுறைக்கு
  கணினி விளையாட்டை
  கற்பிக்கும் இந்நாளில்
  இளைய தலைமுறை
  இவற்றையும் விரும்பிடுமா?

  எப்படியோ ஒருவர் கற்க ,
  இன்னொருவர் கற்பிக்க என
  உறவு வளரத்தானே செய்கிறது ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்! உறவுகள் தொடர்கதைதான்!தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   நீக்கு
 3. அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். ஞாபகம் வருதே .. ஞாபகம் வருதே.

  பதிலளிநீக்கு
 4. பல்லாங்குழியா அது என்ன என்று கேட்கின்ற காலமிது...

  எங்கே திரும்பப்போகிறது அந்தக் காலமெல்லாம்...
  ஊரிலேயே இப்படியெனில் இங்கு வெளிநாட்டில் கேட்கவே வேண்டாம்..
  அருமையான கவிதையும் பகிர்வும்.

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. அந்த நாள் ஞாபகம்
  நெஞ்சிலே
  வந்ததே நண்பனே நண்பனே

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 7. பசுவும் கஞ்சியும்
  மறந்து போன வார்த்தை
  தங்கள் மூலம் மீண்டும் நினைவுக்கு வந்தது
  அந்த கால நினைவுகளுடன்
  மனம் தொட்ட பதிவு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்

  பழைய விளையாட்டை மீண்டும் ஞாபகப் படுத்தி புனைந்த வரிகள் அருமை வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. அன்புடன் கலந்து கொள்ள அழைக்கின்றேன் :

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

  பதிலளிநீக்கு
 11. முதிய தலைமுறைக்கு
  கணினி விளையாட்டை
  கற்பிக்கும் இந்நாளில்
  இளைய தலைமுறை
  இவற்றையும் விரும்பிடுமா?

  உண்மைதான், அவர்கள் விருப்பம் வேறுதான்.
  அந்த உலகத்திற்கு தன் பாட்டி, தாத்தாவை அழைத்து சென்று மகிழவைக்கிறார்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! இன்றைய முதியவர்கள் பேரக்குழந்தையின் இரசனைக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொண்டால் அவர்கள் மகிழ்வடைகிறார்கள்!

   நீக்கு
 12. கணினியில் விளையாடினால்
  கண் பார்வை பறிபோகும்
  கண் போன்ற நேரமும் போகும்.
  குழியில்(பல்லாங்)விளையாடினால்.
  கண் போன்ற சொந்தங்கள்
  காலமெல்லாம் வசமாகும்.
  பொய்யை உண்மைபோல்
  தோற்றமளிக்க செய்யும்
  கணினி தருவது போலி
  மகிழ்ச்சியே.

  பதிலளிநீக்கு
 13. உண்மைதான் ஐயா! சில குழந்தைகள் இன்று தனிமை விரும்பிகளாக மாறி கணினி மற்றும் தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடக்கிறார்கள்! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு