வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சுழற்சி- காரஞ்சன்(சேஷ்)


                                                                சுழற்சி!
ஓடித்தேய்ந்து  உருமாறிய
சக்கரத்தின்  சட்டைகள்
ஓட்டி விளையாட
உங்களிடம் சக்கரமாய்!

பழையனவும் புதிதன்றோ
பயன்பாட்டுச் சுழற்சியிலே!

திசையைத் தேர்ந்தெடு!
விசையளி! விரைந்திடு!

இயக்குவிசை ஒன்றாலே
இயங்கும் விசை நாமன்றோ?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி

28 கருத்துகள்:

  1. இயங்கும் விசை நாமன்றோ...? அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. பழையனவும் புதிதன்றோ
    பயன்பாட்டுச் சுழற்சியிலே!/

    /பல விஷயங்களுக்குப் பொருந்தும்
    அற்புதமான கருத்து
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்



    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  5. பயன்பாட்டுச் சுழற்சியிலே...

    அருமையாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. பழையனவும் புதிதன்றோ
    பயன்பாட்டுச் சுழற்சியிலே!


    புதுமை .. அருமை

    பதிலளிநீக்கு
  7. அழகான பொருள் பொதிந்த கவிதை. நம் வாழ்க்கையில் எல்லாமே, எல்லாவற்றிலுமே ‘சுழற்சி’ தான்.

    படத்தேர்வு அருமை.

    “அஞ்சலை” என்ற என் சிறப்புச் சிறுகதையின் ஆரம்ப வரிகளிலேயே இந்த அழுக்கு டயர் ஓட்டும் சிறுவர்கள் வருவார்கள்.

    http://gopu1949.blogspot.in/2011/04/1-1-of-6.html

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
    2. ஐயா 6 பகுதிகளையும் படித்து முடித்தேன்! அற்புதமான கதை!
      வறுமையின் பிடியும் வளமான வாழ்வும் குழந்தையின் மூலமே
      சித்தரித்த விதம் அருமை! நல்லதொரு படைப்பிற்கு நன்றி!

      நீக்கு
    3. Seshadri e.s.13 September 2013 19:41

      //ஐயா 6 பகுதிகளையும் படித்து முடித்தேன்! அற்புதமான கதை!

      வறுமையின் பிடியும் வளமான வாழ்வும் குழந்தையின் மூலமே சித்தரித்த விதம் அருமை! நல்லதொரு படைப்பிற்கு நன்றி!//

      மிக்க நன்றி, Sir.

      நீக்கு
  8. பழையனவும் புதிதன்றோ பயன்பாட்டு சுழற்சியிலே! உண்மைதான்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  9. திசையைத் தேர்ந்தெடு!
    விசையளி! விரைந்திடு!//
    அருமையான கவிதை வரிகள்,
    அதற்கு பொருத்தமாய் படம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  11. அழகான படம். படத்திற்கேற்ற கவிதை.....

    பாராட்டுகள் சேஷாத்ரி.

    பதிலளிநீக்கு
  12. சின்னதோர் கவிதை என்றாலும் சீர்த்திமிகு கவிதை!விளையாட்டுச் செய்தியினை விவரிக்கின்ற சிந்திக்க வைக்கும் கவிதை!இயங்கல், இயக்கல் என்பவை பற்றிய ஆன்மிகக் கருத்தான இறைவன் இயக்குவதையும் மனிதன் இயங்குவதையும் உணர்த்துகின்ற பாராட்டுக்குரிய கவிதை! தொடர்க!

    பதிலளிநீக்கு
  13. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  14. படத்திற்கேற்ற சிறப்பான வரிகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. சுழற்சி அருமை! இயக்குவிசை, இயங்குவிசை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  16. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    பதிலளிநீக்கு