ஞாயிறு, 27 அக்டோபர், 2013

அழகோ அழகு! -காரஞ்சன்(சேஷ்)


 
 
 அழகு!
 
 
 
 
 
 
 

அமைதி தவழும் அதிகாலைப் பொழுதழகு!

அலர்ந்த பூக்களில் அமர்கின்ற வண்டழகு!

அத்தனை புற்களிலும் முத்தான பனிஅழகு!

மாலைப் பொழுதின் மங்கிய ஒளி அழகு!
 

நீலவானத்தில் நீந்தும் முகில் அழகு!
 
பிறைநுதலில் விண்மீனாய் பிரியாத பொட்டழகு!

ஓடும் நதி அழகு! ஊர்க்குளத்தில் மீனழகு!

தளிர்கள் உரைத்திடும் தாய்மொழி தனியழகு!
 

வான்மீது விழுகின்ற வளைவான வில்லழகு!

கருத்த மேகத்தை  கடக்கின்ற கொக்கழகு!

சக்கரத்தின் சுழற்சியிலே மட்பாண்ட பிறப்பழகு!

முழுநிலவை மூடி முத்தமிடும் முகிலழகு!

 
விடிகின்ற வேளைதனில் விரைகின்ற புள்ளழகு!

வெள்ளம் வடிந்தபின்னே வெண்மணல் ஆறழகு!

வெண்மணலில் தடம்பதித்து விரைவதும் ஓரழகு!

கால்களை வருடும் கடலலையும் ஓரழகு!

 
தென்றல் சுமந்துவரும் தெம்மாங்குப் பாட்டழகு!

பள்ளமில்லாச் சாலையிலே பயணிப்பதோர் அழகு!

இருபுறமும் மரமிருக்கும் தார்ச்சாலை தனிஅழகு!

மழையில் குளித்தபின்னர் மரங்களெல்லாம் அழகு!

 
வான்மழையில் நனைந்த வாடிய பயிரழகு!

காற்றின் திசையினிலே நாற்றசைவும் நல்லழகு!

நற்றமிழின் சொற்களினால் நவில்கின்ற கவிஅழகு!

இயற்கையை இரசிப்பவர்க்கு எந்நாளும் உலகழகு!

                                                                                                -காரஞ்சன்(சேஷ்)

 பட உதவி: கூகிளுக்கு நன்றி!

30 கருத்துகள்:

 1. ஆஹா, எல்லாமே அழகோ அழகு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் உடனடி வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 3. ஓ.. உங்கள் கவிதையும் ரொம்பவே அழகு..... வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 5. தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 6. இயற்கையை இரசிப்பவர்க்கு எந்நாளும் உலகழகு!//

  உணமை. இயற்கையை ரசிக்க ஆரம்பித்தால் திகட்டா அழகு தான்.
  உலகம் எவ்வளவு இனிமையானது!
  அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 8. அத்தனை அழகும் இத்தனை அழகானது உங்கள் கவியினால்..

  மிக மிக அருமை!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 11. அழகிற்கு அணி சேர்த்த உங்கள் கவிதை அழகு.

  பதிலளிநீக்கு
 12. தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 13. தமிழினிமை கூட்டும் அற்புதக் கவியழகு. பாராட்டுகள் தங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 14. தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 15. சக்கரத்தின் சுழற்சியிலே மட்பாண்ட பிறப்பழகு!முழுநிலவை மூடி முத்தமிடும் முகிலழகு! - உண்மையிலேயே மிகவும் அழகான கவிதை!
  Shanmugasundaram Ellappan

  பதிலளிநீக்கு
 16. தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 17. தங்கள் கவியால் அத்தனையும் அழகானது. நல்லதொரு கவிதைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். தொடருங்கள் சகோ..

  பதிலளிநீக்கு
 18. தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 19. உள்ளம் கொள்ளை கொண்டது உங்கள் கவி அழகு!
  பகிர்ந்தமைக்கு நன்றி- தக்‌ஷி

  பதிலளிநீக்கு
 20. தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 21. எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்
  என்றார் பாரதி
  அத்தனி இன்பமும் பார்க்கத் தெரிந்தால்தான்
  எனச் சொல்லிப்போகும் கவிதை
  அருமையிலும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 22. தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி

  பதிலளிநீக்கு