ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மழையடிச்சு மரம் அழுதா?- காரஞ்சன்(சேஷ்)


மழையடிச்சு மரம் அழுதா?

சுத்தி மணலிருக்க
சூரியனும் சுட்டெரிக்க
படர்ந்த மரமொண்ணு
பசுங்குடையாய் விரிஞ்சிருக்க

சொத்து எதுவுமில்லை
சொந்தபந்தம் ஏதுமில்லை!
சேத்தைப் பிசைஞ்சு வைச்ச
செவுறுகளே என் வீடு!

பச்சை மரத்தினிலே
பதிஞ்ச ஆணிபோல
நெஞ்சுக் குழிபாரம்
நித்தம் எம் பாட்டினிலே!

செவுத்துக்குள்ள நான்பாட
செவிமடுக்க வளைஞ்ச மரம்!
மழையடிச்சு மரம் அழுதா
மண்குடிசை தாங்கிடுமா?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

19 கருத்துகள்:

 1. //நெஞ்சுக் குழிபாரம்
  நித்தம் எம் பாட்டினிலே!

  செவுத்துக்குள்ள நான்பாட
  செவிமடுக்க வளைஞ்ச மரம்!//

  வறுமையைக்கூறிடும்
  அருமையான பாடல் வரிகள் .....

  நம்மையும் கூடவே அழ வைக்கிறதே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
  2. படர்ந்த மரமொண்ணு
   பசுங்குடையாய் விரிஞ்சிருக்க

   வறுமையின் நிறம் சிவப்பாக விரியும் கவிதை..

   நீக்கு
  3. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி !

   நீக்கு
 2. அருமையான படம்.....

  பார்க்கும்போதே பிடித்திருந்தது. கூடவே உங்கள் கவிதையும் இருக்க மிகவும் ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
 3. பச்சை மரமே கூறையாக!
  அழகான படம்.
  ஆனால் மனம் கனக்க வைத்து விட்டதே.

  செவுத்துக்குள்ள நான்பாட
  செவிமடுக்க வளைஞ்ச மரம்!
  மழையடிச்சு மரம் அழுதா
  மண்குடிசை தாங்கிடுமா?//

  மனம் தாங்கவில்லையே!

  பதிலளிநீக்கு
 4. manathai kanakka vaikkum varikal. Aazhamaana karuththu. ungal pulamaikkuch chaandru

  பதிலளிநீக்கு
 5. ///செவுத்துக்குள்ள நான்பாட
  செவிமடுக்க வளைஞ்ச மரம்!///
  அற்புதம் நண்பரே
  அருமையான் கவி
  அதற்கேற்ற படமும் அருமை
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 6. //செவுத்துக்குள்ள நான்பாட செவிமடுக்க வளைஞ்ச மரம்!
  மழையடிச்சு மரம் அழுதா மண்குடிசை தாங்கிடுமா?//அருமையான வரிகள்! நன்று! தொடர்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

   நீக்கு
 7. Where from you are getting such pictures and arthangal pothintha varigal.
  -asha prakashkumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி

   நீக்கு