செவ்வாய், 28 அக்டோபர், 2014

ஒட்டுவாரின்றி உடைகிறதோ? -காரஞ்சன்(சேஷ்)


                                                          ஒட்டுவாரின்றி உடைகிறதோ?

ஏற்றிவைத்த விளக்குகளால்
எத்தனையோ இரவுகளில்
வெளிச்சம் பரப்பிய
விளக்குமாட விழிகள்!

எத்தனையோ மனிதர்கள்
மி(ம)தித்தும்
நித்தம் கடந்திருப்பர்
நிலைப்படியை!

எத்தனை குழந்தைகள்
ஏறிநின்று முகம்காட்டி
கெட்டியாய்ப் பிடித்திருப்பர்
எட்டுக்கம்பி ஜன்னலினை!

கட்டியவர் மட்டுமின்றி
ஒட்டிய உறவுகளும்
கைவிட்டுச் சென்றனரோ?
ஒட்டுவார் யாருமின்றி
உடைகிறதே வீடொன்று!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: நன்றி!-மாயவரத்தான் MGR அவர்களின் வலைப்பூ!

14 கருத்துகள்:

 1. மனதில் அப்படியே ஒட்டிக்கொள்ளும் கவிதை .... அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

   நீக்கு
 2. படமும் அதற்கேற்ற கவிதையும் சிறப்பு! கண்முன்னே நிற்கிறது வீடு! நன்றி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி

   நீக்கு
  2. மண்ணிலிருந்து உருவானது
   மீண்டும் மண்ணுக்கே செல்கிறது. அதுதானே இயற்கையின் விதி .இதில் விசனப்பட ஒன்றுமில்லை.

   நீக்கு
  3. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

   நீக்கு
 3. கட்டியவர் மட்டுமின்றி
  ஒட்டிய உறவுகளும்
  கைவிட்டுச் சென்றனரோ?
  ஒட்டுவார் யாருமின்றி
  உடைகிறதே வீடொன்று!
  இப்படி எத்தனை வீடுகள். கவிதை அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி!

   நீக்கு
 4. //ஏற்றிவைத்த விளக்குகளால்
  எத்தனையோ இரவுகளில்
  வெளிச்சம் பரப்பிய
  விளக்குமாட விழிகள்//
  மிகவும் ரசித்தேன்! என்னைப் புகைப்படம் எடுக்கவும் எழுதவும் தூண்டிய வீடு உன்னையும் அருமையான கவிதைப்படிக்கத்தூண்டியது மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி! தங்களின் வலைப்பூவிலிருந்து நான் பயன்படுத்திய புகைப்படம்தான் அது! நன்றி!

   நீக்கு
 5. // ஒட்டுவார் யாருமின்றி
  உடைகிறதே வீடொன்று!//

  அடடா.....

  நல்ல கவிதை நண்பரே.

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகை மகிழ்வளித்தது! மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  ஐயா
  மகிழ்வூடும் வரிகள்பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு