வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்!
வெண்பா அறிந்தவர்கள் குறையிருப்பின் சுட்டுக. பிழையிருப்பின் பொருத்தருள்க.
நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)
"நம் உரத்த சிந்தனை" இதழுக்கு ஒளிப்படக் கவிதைப் போட்டிக்கு நான் எழுதி
அனுப்பிய கவிதை பரிசுக்குத் தெரிவாகி இம்மாத இதழில் வெளிவந்துள்ளது
என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,
அந்தக் கவிதையை என் வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்.
கவிதைக்கான இணைப்பு இதோ:
ஒரு வெண்பா எழுத ஆசைப்பட்டு "உத்தம வாழ்வென் றுணர்" எனும்
ஈற்றடிக்கு நான் எழுதிய வெண்பா.
நித்தமும்
சோறுண்டு நீட்டிக்
கதைபேசி
இத்தனை
நாட்கள் கழிந்தன
-இத்தலத்தில்
எத்தனை
பேர்க்கு பயன்தந்தோம் என்பதுவே
உத்தம வாழ்வென் றுணர்!
வெண்பா அறிந்தவர்கள் குறையிருப்பின் சுட்டுக. பிழையிருப்பின் பொருத்தருள்க.
நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)