வியாழன், 12 ஜூன், 2014

ஒளிப்படக் கவிதைக்குப் பரிசு! -காரஞ்சன்(சேஷ்)

வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்!

"நம் உரத்த சிந்தனை" இதழுக்கு ஒளிப்படக் கவிதைப் போட்டிக்கு நான் எழுதி
 
அனுப்பிய கவிதை பரிசுக்குத் தெரிவாகி இம்மாத இதழில் வெளிவந்துள்ளது
 
என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,
 
அந்தக் கவிதையை  என் வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்.
 
கவிதைக்கான இணைப்பு இதோ:
 
 
 
ஒரு வெண்பா எழுத ஆசைப்பட்டு  "உத்தம வாழ்வென்  றுணர்" எனும்
 
ஈற்றடிக்கு நான் எழுதிய வெண்பா.


நித்தமும் சோறுண்டு  நீட்டிக்  கதைபேசி

இத்தனை நாட்கள்  கழிந்தன -இத்தலத்தில்

எத்தனை பேர்க்கு பயன்தந்தோம் என்பதுவே

உத்தம வாழ்வென் றுணர்!

வெண்பா அறிந்தவர்கள் குறையிருப்பின் சுட்டுக. பிழையிருப்பின் பொருத்தருள்க.

நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)

20 கருத்துகள்:

 1. அற்புதமான கவிதை
  பரிசு பெற்றது ஆச்சரியமளிக்கவில்லை
  கவிதைகளும் பரிசுகளும் தொடர நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. கட்டுரைப் போட்டியில் தங்கள் மனைவி பரிசு பெற்றார்கள்
  இப்பொழுது தாங்கள் பரிசு பெற்றுள்ளீர்கள்
  பரிசுக் குடும்பம்
  வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 3. விமர்சனம், சிறுகதை, கவிதை, வெண்பா என திறமைக்கு பட்டை தீட்டிக் கொண்டேயிருக்கறீர்கள் ... வாழ்த்துக்கள் ....... வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 4. ’ நம் உரத்த சிந்தனை’ இதழின் ஒளிப்பட கவிதைப்போட்டியில் பரிசு பெற்றதற்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  [நம் உரத்த சிந்தனை இதழுக்கு சந்தா கட்டி தொடர்ந்து படிப்பவனாக இருப்பினும் இதை நான் கவனிக்கவில்லை. கவிதை + வெண்பா பக்கங்களை மட்டும் அப்படியே புரட்டிச் செல்வது தான் என் வழக்கம். அவைகளில் அவ்வளவு ஒரு ஈடுபாடு எனக்கு ;) ]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

   நீக்கு
 5. இந்த ஜூன் மாத ‘உரத்த சிந்தனை இதழ்’ இன்று தான் எனக்குத் தபாலில் வந்தது. தங்கள் கவிதையை பக்கம் எண்: 17ல் Left Top Corner இல் படித்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. உரதத சிந்தனை இதழில் உங்கள் கவிதை. பரிசு பெற்றதற்கு பாராட்டுகள்.....

  பதிலளிநீக்கு