வியாழன், 13 செப்டம்பர், 2018
செவ்வாய், 19 ஜூன், 2018
கரையாத துயருமுண்டோ?
செவ்வாய், 12 ஜூன், 2018
அகலட்டும் அல்லல்கள்!
அகலட்டும் அல்லல்கள்!
கொளுத்தும் வெயிலுக்கு
வெளுத்த உடை!
தேர்காண வந்தோரின்
வேர்வை போக்கிட
விரிந்த கரங்களில்
விற்பதற்காய் விசிறிகள்!
அரங்கனின் பார்வைக்கு
அவர் விசிறி!
செய்யும் தொழிலதனை
தெய்வமாய் நினைப்பதால்
அரங்கனும் ஆவாரோ
அவரின் விசிறி?
கடைக்கண் பார்வைக்குக்
காத்திருக்கும் அவருக்கு
அரங்கன் அருளால்
அகலட்டும் அல்லல்கள்!
- காரஞ்சன்(சேஷ்),
திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
சனி, 14 ஜனவரி, 2017
பொங்கலோ பொங்கல்!
புவிவாழ மேழிதனை
புயமேந்தும் உழவர்கள்
தவிக்கின்றார் துயரினிலே
செவிமடுப்போம் துயர்களைய!
தீயினில் தூசாக
தீமைகள் மறையட்டும்!
போயின துயரென்று
போகியில் துவங்கிடுவோம்!
பகலவன் வரவாலே
பனிவிலகல் போலிங்கு
இனிவரும் நாளெல்லாம்
இன்பங்கள் பெருகட்டும்!
நீருண்ட மேகங்கள்
வேருண்ண நீர்தந்து
விளைச்சலைப் பெருக்கி -மன
உளைச்சலைப் போக்கட்டும்!
செந்நெல் பெருகி
மங்கல மஞ்சளொடு
பொங்கட்டும் மகிழ்வெங்கும்
பொங்கலோ பொங்கலென!
இனிவரும் நாளெல்லாம்
இன்பம் பெருகவென்று
திளைத்திடுவோம் மகிழ்வினிலே
தித்திக்கும் பொங்கலுடன்!
துன்பமும் துயரமும்
தொலையட்டும் இந்நாளில்!
மங்கல ஒலியெழுப்பி
மகிழ்ந்திருப்போம் அனைவருமே!
வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வியாழன், 14 ஏப்ரல், 2016
அறுபதில் பாதியாய் அமைந்த துன்முகியே!-காரஞ்சன்(சேஷ்)

நீர்வளம் பெருகி
ஏர்நிலை உயர்ந்திட
உறுதுயர் களைய
உள்ளங்கள் உருகிட
ஊர்கள் அனைத்தும்
உயர்நிலை அடைந்திட
ஊறிடும் பாசத்தால்
உறவுகள் பெருகிட
பேரொடு புகழும்
பெருவாழ்வும் பெற்றிட
அறுபதில் பாதியாய்
அமைந்த துன்முகியே
பேரருள் வழங்கி
பெருமைகள் சேர்த்திடுவாய்!
அனைவருக்கும் இனிய துன்முகி ஆண்டு சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
லேபிள்கள்:
தமிழ்ப்புத்தாணடு,
துன்முகி,
வாழ்த்து
வியாழன், 14 ஜனவரி, 2016
பொங்கல் வாழ்த்து!-காரஞ்சன்(சேஷ்)

பொங்கலோ பொங்கல்!
செங்கரும்பின்
சுவையுடனே
பொங்கட்டும் புதுப்பொங்கல்!
மங்கலங்கள் பலபெருகி
மக்களெலாம் மகிழ்வுறுக!
தலையாய உழவெங்கும்
தழைக்கட்டும் தரணியிலே!
மாசிலாச் சுழல்
மலரட்டும் புவியெங்கும்!
எல்லோர்க்கும்
மகிழ்வளிக்கும்
இயற்கைவளம் காப்போம்!
பொங்கல் திருநாளில்
பொங்கட்டும் மகிழ்வெங்கும்!
பொங்கலோ பொங்கலென
மங்கலக் குரலெழுப்பி
மகிழ்ந்திடுவோம்
இந்நாளில்!
பொங்கலோ பொங்கல்!
--காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






