திங்கள், 9 ஜனவரி, 2012

புகையிலா போகி - காரஞ்சன்(சேஷ்)

 புகையிலா போகி!
பழையன போக்குதலை
பகர்கின்றோம்  'போகி'யென!

தேவையற்ற பொருட்களே- தன்
தேவையென ஒரு தொட்டி
தெருக்களில் இருக்கையிலே
இருளகலும் வேளையிலே
எரிப்பதனால் எழும்புகையால்
ஏன் சூழல் கெடவேண்டும்?

மனிதருக்குப் பலநோய்கள்
மாசடைந்த காற்றாலே!
புவிவெப்பம் அதிகரிக்கும்
புகைநஞ்சே நம்பகையாம்!

வருங்கால வாழ்வு
வளமாக அமைந்திடவே
புகையற்ற போகிதனை
புவிகாண ஒத்துழைப்போம்!
                                                           -காரஞ்சன் (சேஷ்)

பொங்கல் திருநாளின் முதல்நாளை போகி என்றழைக்கிறார்கள். இந்நாளில் பழைய பொருட்களை தீயிட்டு எரிக்கிறார்கள். பெரு நகரங்களில் கூட பழைய துணிமணிகள், டயர்கள்,பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அதிகாலைப் பொழுதில் எரித்து, காற்று மண்டலத்தை மேலும் மாசடையச் செய்கிறார்கள். மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வளமான சூழலை உருவாக்க முயல்வோம். புகையிலா போகியைக் கொண்டாடி மகிழ்வோம்!

அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

12 கருத்துகள்:

 1. காலத்திற்கு ஏற்ற மிகவும் பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. தக்க சமயத்தில் தக்கதை சொல்லிப் போகும்
  அருமையான விழிப்புணர்வுப் பதிவு
  மனம் கவர்ந்த அழகான பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. சரியான நேரத்தில் ,
  சரியான விழிப்புணர்வு பதிவு.

  பதிலளிநீக்கு
 4. An very very apt kavithai for the forthcoming BOGI Pandigai. This kavithai is an Eye opener to burn all old custums of compulsarily BURNING the old items on bogi . Let us enter into an new era of not polluting the atmosphere . I like this Kavithai very much.

  பதிலளிநீக்கு
 5. இது எப்படி இருக்கிறது என்றால்
  குடிப்பவர்களிடம் மது உடல்நலத்திற்கு கேடு
  என்ற அறிவிப்பை கொடுத்ததும்
  குடிப்பவர்கள் எண்ணிக்கை
  அதிகரித்து கொண்டுபோவதுபோல்தான்

  ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக் குப்பைகளை வீட்டுக்கு வீடு மக்கள் போட்டி போட்டுகொண்டு போட்டு எரிக்கின்றனர். பனிமூட்டம் இருப்பதால் அந்த புகை வானத்தையே மூடி பல மணி நேரங்களுக்கு அப்படியே இருந்து பெருந்தீங்கை விளைவிக்கிறது.
  விமானங்கள் கூட த்ரைஇறங்க முடியாதபடி புகை மூட்டம் வானில் நிற்கிறது.
  திருந்தாத ஜன்மங்கள்
  வருந்தாத உள்ளங்கள்.
  நீங்களும் நானும்
  ஊதுவோம் சங்கு
  செவிடர்கள் காதில்
  விழுந்தால் சரி

  பதிலளிநீக்கு
 6. புகையில்லாத போகியை நிச்சயம் கொண்டாடுவோம்..தங்கள் தளத்தை பின் தொடரலாம் என்று இருக்கிறேன்..நீங்களும் என் தளம் வாருங்கள் பிடித்திருப்பின் இணைந்து கொள்ளுங்கள்..

  சந்தேகம்

  பதிலளிநீக்கு
 7. சரியான சமயத்தில் சரியான தகவல் சொல்லும் கவிதை.... வாழ்த்துகள் நண்பரே....

  பதிலளிநீக்கு
 8. "very nice and timely article. hats off"

  Kasthuri Balaji

  பதிலளிநீக்கு
 9. பின்பற்ற வேண்டிய கருத்து!

  வளர்க உமது கவிதை ஆக்கங்கள்!

  முகுந்தன்

  பதிலளிநீக்கு
 10. கவிதையும் உங்களின் கருத்தும் நன்று! நன்றி!

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்த நெஞ்சம் வேண்டும்
  அது உங்களுக்கு இருக்கிறது
  நீங்கள் வாழ்க
  உங்கள் பணி
  சிறக்கவாழ்த்துக்கள்

  இருந்தாலும்
  உண்மை சுடும்

  இந்த சமுகத்திற்கு
  அறுவை சிகிச்சை தேவை

  வாழ்த்துக்கள் போன்ற
  வலி மறக்கும் மாத்திரைகள்
  நோயை குணப்படுத்தாது

  மாறாக நோயின் கடுமையை
  அதிகபடுத்தவே செய்யும் என்பதை
  உணறும் காலம் வந்துவிட்டது

  நாம் மகிழ்ச்சியாக
  பொங்கலை சுவைக்கின்றோம்

  ஆனால் அந்த பொங்கல் பண்டிகைக்கு மூலாதார
  விவசாயிகளின் வாழ்வு சுவையாக இருக்கிறதா
  என்று யாரும் நினைப்பதில்லை

  பயிர் செய்யும் உழவனுக்கு நிலம் சொந்தம் இல்லை
  அவனுக்கு நாட்டில் மதிப்புஇல்லை
  மரியாதை இல்லை

  உழவு செய்பவன் வீட்டில் எழவுதான் நடக்கிறது
  கடன் சுமையால் இந்தியாவில் லட்சகணக்கில்
  பல விவசாயிகள் தங்கள்
  இன்னுயிரை மாய்த்து கொள்வதால்

  அவனுக்கு பாதுகாப்பில்லை

  புயல்,வெள்ளம்,வறட்சி உரத்தட்டுப்பாடு
  விதை தட்டுப்பாடு, அவர்கள் உழைப்பை உறிஞ்சும்
  இடைத்தரகர்கள்.பயிர் செய்ய நீர்பற்றாக்குறை
  சீரற்ற மின்விவியோகம் என அவன் வளர்க்கும்
  பயிருக்கும் பாதுகாப்பில்லை

  விளைஞ்ச பொருளுக்கும் உரிய விலையில்லை
  சேமித்து பாதுகாக்க கிடங்குமில்லை

  அரசுகள் செய்யும் விளம்பர உதவிகள்
  அவர்களை உரிய காலத்தில்
  சென்று சேர்வது கிடையாது

  அவர்கள் மறைந்த பிறகு அவர்கள் குடும்பத்திற்கு
  வழங்கும் கருணை தொகையை தவிர(லஞ்ச தொகை போக)
  அதைக்கூட கருணையற்ற கடன்காரர்கள் கொள்ளைஅடித்து சென்றுவிடுவார்கள்

  அவர்களோடு சேர்ந்து வாழும்
  கால்நடைகளின் வாழ்வு
  அதைவிட கொடுமையானது
  பராமரிப்பின்றி விடப்படும்
  கால்நடைகளின் எண்ணிக்கை
  ஏராளம். சாலைகளில் திரிந்து கொண்டிருக்கும்
  ஏராளமான மாடுகளே இதற்க்கு சாட்சி

  அவைகளை அடிமாட்டு விலைக்கு ஆயிரகணக்கில்
  இறைச்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு விற்று
  விடுவது இன்று தாராளம்

  தங்களை பெற்று வளர்த்து
  ஆளாக்கிய பெற்றோர்களையே
  அனாதையாக விட்டுவிட துணிந்துவிட்ட
  இன்றைய சமுதாயம்
  கால்நடைகளையா பராமரிக்க போகிறார்கள்?

  தன்னை சுற்றியுள்ள அவலங்களை
  கண்டும் காணாமல்
  இருந்துகொண்டு ஆண்டில்
  சில நாட்களில் மட்டும் வாழ்த்து செய்திகள்
  பரிமாறிகொள்வதில் அர்த்தம் ஏதும் இல்லை

  சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
  சிந்தை இரங்காரடி என்ற பாரதியின் வரிகள் அனைவரின் உள்ளங்களையும் தைக்கவேண்டும்

  உள்ளம் பண்படவேண்டும்
  அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தால்தான்
  நாமும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்

  அரசியல் தலைவர்களாகட்டும்,
  தொலைகாட்சி, திரைப்பட,ஊடகங்களிலாகட்டும்
  மனிதரை மனிதர்கள் இழிவு செய்வதும்,
  தன் சுயநலத்திற்க்காக பிறரை கொன்று
  அழிப்பதும்தான் மீண்டும்மீண்டும்
  காண்பிக்கப்பட்டு மனிதரின்
  ரசனையை கெடுக்கும் போக்கு
  கண்டிக்கத்தக்கது

  நாளிதழ்களில் வரும் பெரும்பாலான செய்திகள்,
  மோசடிகள்,ஊழல்கள் கொலைகள்,விபத்துகள்
  போன்றவைகள் தான் பிரதானமானவை

  மக்கள் மனதை பண்படுத்தும் செய்திகள்,
  சமுதாயத்திற்கு ஆக்கமும் ஊக்கமும்
  தரும் செய்திகள் மூலைக்கு தள்ளபடுகின்றன

  இன்று நாம் காணும் மகிழ்ச்சி பிறரை இழிவுபடுத்தி இன்பம் காணுவதிலும் ,சுற்று புறத்தை பாழ்படுத்திஇந்த புனித பூமியை நஞ்சாகிகொண்டு நாட்களை கடத்திக்கொண்டு வருகிறோம்
  என்பதுதான் நிதரிசனம்
  .
  மாற்றம் ஒவ்வொரு உள்ளத்திலிருந்து தொடங்கவேண்டும்

  அது வலுபெற்றால்தான் நன்மை பயக்கும்

  பதிலளிநீக்கு
 12. காதிருந்தும் செவிடர்களான தமிழ் மக்கள்
  நச்சு புகை சூழ அதிகாலையில் சாலையில்
  நடப்பவர் கண்களில் எரிச்சல் தோன்ற
  சுவாச நோய் உள்ளவர்கள் சுவாசிக்க சிரமப்பட
  போகியை கொண்டாடி மகிழ்ந்தனர் வழக்கம்போல் .
  வாழ்க தமிழ் வளர்க அவர்களின் தமிழ் பண்பாடு

  பதிலளிநீக்கு