வியாழன், 12 ஜனவரி, 2012

பொங்குக பொங்கல்! -காரஞ்சன்(சேஷ்)

 பொங்குக பொங்கல்!

சுழலும் உலகிற்கு
உழவே அச்சாணி!

தலையாய உழவர்க்கு
தைத்திங்கள் திருநாள்!

தென்னகத்து உழவன்
தன்னகத்தே கொண்ட
நன்றியெனும் உணர்வை
நவிலும் நாள்-பொங்கல்!

அறுவடைத் திருநாளாய்
அமைந்திடுமே பொங்கல்!

கதிரால் கதிர் விளைக்கும்
கதிரவனின் கருணைக்கு
புத்தரிசிப் பொங்கலிட்டு
புகன்றிடுவான்- நன்றி!

மெழுகிய முற்றந்தனில்

மாவிலைத் தோரணங்கள்!
மாக்கோல ஓவியங்கள்!

செங்கற்கள் அடுப்பாக
செங்கரும்பு உடன் நிற்க
பொன்மஞ்சள் கழுத்தோடு
புதுப்பானை- பொங்கலிட!

பொங்கிவரும் பாலுடனே
புத்தரிசி பானைபுக
புதுவெல்லம் உடன்சேர

பொங்கி வரும் வேளை
"பொங்கலோ பொங்கல்!"என
மங்கல ஒலிஎழுப்பி
மகிழ்ந்திடுவீர் அனைவருமே!

மங்கலம் பொங்கி
மனைநலம் சிறக்கட்டும்!

நம்பிக்கை மெய்யாகி
நற்பயன்கள் நல்கட்டும்!

விளைந்த பொருளனைத்தும்
விலையாகிப் பயன்தரட்டும்!

இயற்கையின் சீற்றம் இனி
இல்லை யென்றாகட்டும்!

காளையரும் கன்னியரும்- மண
நாளை எதிர் காணட்டும்!

உழவர்தம் வாழ்வு
ஒளிமயமாய்த் திகழட்டும்!

இனிவரும் நாளெல்லாம்
இன்பமாய் அமையட்டும்!

                      பொங்கலோ பொங்கல்!
                  -காரஞ்சன்(சேஷ்)
        படங்கள்: உதவிக்கு கூகிளுக்கு நன்றி                     

18 கருத்துகள்:

 1. பொங்குக பொங்கல்-உண்மையிலே பொங்குகிறது! பாராட்டுக்கள் சார்! இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகை புரிந்து வாழ்த்தியமைக்கு நன்றி! பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 2. யாவர்க்கும் எமது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  நிழோனி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகை புரிந்து வாழ்த்தியமைக்கு நன்றி! பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 3. பொங்கல் சிறப்புக் கவிதை அருமை
  பகிர்வுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகை புரிந்து வாழ்த்தியமைக்கு நன்றி! பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 4. பொங்கலோடு உங்கள் தமிழும் பொங்கட்டும்..தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்..


  தமிழ் புத்தாண்டு தினத்தை தீர்மானிப்பது அரசியல் வாதிகளா?இலக்கியவாதிகளா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகை புரிந்து வாழ்த்தியமைக்கு நன்றி! பொங்கல் நல்வாழ்த்துக்கள்! கட்டுரை சிந்தனையைத் தூண்டும் வண்ணம் உள்ளது! அருமை!

   நீக்கு
 5. Nice! Wish u and your family a happy Pongal and a very prosperous year ahead!
  Shanmugasundaram Ellappan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகை புரிந்து வாழ்த்தியமைக்கு நன்றி! பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 6. பொங்கல் கவிதை அருமை . உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார் . முகுந்தன்

  பதிலளிநீக்கு
 7. kavathai arumai and the "Pongal Photo" is too excellent sir, ramanan Pongal wishes

  பதிலளிநீக்கு
 8. கவிதைகளும் கட்டுரையும் மிக மிக அருமை.

  நண்பேன்டா என்பதில் அளவிலா பெருமை.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .  பா.ராஜூ

  பதிலளிநீக்கு
 9. Anthuvan wrote:
  nice poem "pongal greetings to you and to your family"

  பதிலளிநீக்கு