வியாழன், 15 நவம்பர், 2012

வாழவை! -காரஞ்சன்(சேஷ்)

                                                     
                                                                  வாழவை!


     விளைந்திடும் பயிருக்கு
     வேண்டிய நீரில்லை!
     களையான நெல்வயலைக்
     களையாக விடலாமோ?
     களைந்திடு துயரென்று
     கரம்நீட்டி வேண்டுகிறேன்!
 
     இப்புவியின் பரப்பினிலே
     முப்பங்கு நீர்படைத்தாய்!
     எப்(ம்)பங்கும் இல்லையெனில்
     முப்போகம் விளைவதெங்கே?
      இப்போகம் விளைந்திடவே
     இன்னருள் புரியாயோ?

     பெருகிடும் கண்ணீரில்
     உருகாதோ உந்தனுள்ளம்?
     நெல்விளையும் நிலங்களிலே
      கல்லறுக்கும் நிலைதகுமோ?
      கரையட்டும் கல்நெஞ்சம்-நின்
     கருணை மழையாலே!


                            -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

26 கருத்துகள்:

  1. விரைவில் மழை வந்து செழிக்கட்டும்...

    படத்திற்கேற்ற ஆதங்க வரிகள்... உண்மை வரிகள்....

    பதிலளிநீக்கு
  2. தங்களின் உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  3. படமும் அதற்கான கவிதையும்
    உள்ளம் உருக்கிப் போனது
    மனம் தொட்டப் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  5. சரியான நேரத்தில் மழைவந்து எல்லாரையும் வாழவைக்கும். நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  6. //கரையட்டும் கல்நெஞ்சம்-நின்
    கருணை மழையாலே!//

    அருமை! பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. படத்திற்கேற்ற சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. களைந்திடு துயரென்று
    கரம்நீட்டி வேண்டுகிறேன்!
    வேண்டுதல் பலித்திட பிரார்த்திப்போம்..

    பதிலளிநீக்கு
  9. ''..இப்புவியின் பரப்பினிலே
    முப்பங்கு நீர்படைத்தாய்!
    எப்(ம்)பங்கும் இல்லையெனில்
    முப்போகம் விளைவதெங்கே?
    இப்போகம் விளைந்திடவே
    இன்னருள் புரியாயோ?..''

    நல்ல வரிகள்.
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  10. அன்புடையீர்,

    வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் பற்றியும்
    தங்களின் ஓருசில பதிவுகள் பற்றியும் இன்று
    நம் “யுவராணி தமிழரசன்” அவர்களால்
    வலைச்சரத்தில் பெரிதும் பாராட்டிப்
    பேசப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

    இணைப்பு இதோ:

    http://blogintamil.blogspot.in/2012/11/2.html

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    தங்களுக்கு என்
    மனமார்ந்த பாராட்டுக்களும்
    அன்பான வாழ்த்துகளும்.

    அன்புடன்
    வை.கோபாலகிருஷ்ணன்
    gopu1949.blogspot.in .

    பதிலளிநீக்கு
  11. தங்களின் வாழ்த்து மகிழ்வளித்தது! தகவலுக்கு நன்றி ஐயா!
    என்றூம் அன்புடன்
    காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  12. வாழவை ....
    நிச்சயம் வாழ வைக்கும் வரிகள் ..
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. nalla kavithai sonthame.....


    vaazhvaarkal nam sonthangal.....(vivasaayikal)

    பதிலளிநீக்கு
  14. wondering about you there is no word to praise you

    anthuvan cuddalore

    பதிலளிநீக்கு
  15. பெருகிடும் கண்ணீரில்
    உருகாதோ உந்தனுள்ளம்?
    நெல்விளையும் நிலங்களிலே
    கல்லறுக்கும் நிலைதகுமோ?
    கரையட்டும் கல்நெஞ்சம்-நின்
    கருணை மழையாலே!//

    உங்கள் கவிதை மழையால் எங்களின் கண்களில் இருந்து கண்ணீர் வரும் போது இறைவனின் நெஞ்சம் உருகாதா!
    மார்கழி முதல் தேதியில் மழை பெய்து நம்பிக்கை அளிக்கிறது.
    மழை பெய்து, மக்கள் குறை தீரட்டும்.

    பதிலளிநீக்கு