புதன், 4 ஜூன், 2014

என்னுயிர்த்தோழி கேளொரு சேதி!- காரஞ்சன்(சேஷ்)

 
என்னுயிர்த்தோழி கேளொரு சேதி!

என்னுயிர்த்தோழி கேளொரு சேதி!
இதுதானோ சில மனிதர்கள் நீதி?

தன்னலம் ஒன்றே நினைவினில் கொள்வார் -தன்
தலைமுறை செழிக்க வழிவகை செய்வார்
மக்கள் நலனை மனதினில் கொள்ளார்
எப்பழி வரினும் ஏற்றிடத் துணிவார்!

மனைவிலை அறிவார்! மணல்விலை அறிவார்!
இயற்கை வளங்களை அழித்திடத் துணிவார்-வருகிற
தலைமுறை செழிப்புடன் வாழ இருக்கும்
வளங்களைக் காத்திட நினையார்!

கழிவுநீரினை ஆற்றினில் கலந்தால்
அழிவு நேர்ந்திடும் என அறியாரோ?
இனியேனும் இவர் இதை உணர்வாரோ?
வளங்களைக் காக்க வழி வகுப்பாரோ?
  
கரைபுரண்டோடிய காவிரி ஆறு -நீரின்றிக்
காய்கின்ற நிலையினைப் பாரு!
புதுப்புனல் பொங்கும் நாள் வருமோடி?
எங்கும் மகிழ்வினைத் தான் தருமோடி?
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

28 கருத்துகள்:

  1. காவிரியை வறண்ட பாலைவனமாக
    ஆக்கியவர்கள் மனித குல விரோதிகள்
    அந்த புண்ணிய செயலில் அதன் கரையோரத்தில் வாழ்கின்ற அனைவருக்கும் பங்குண்டு
    அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல
    அவள் இன்னும் பொறுமை காக்கிறாள்.
    அவள் சினம் கொண்டால் கரைகளும் இருக்காது
    அவளின் வளங்களை கொள்ளை அடித்த கறை வேட்டிகளும் கரை( படிந்த ) அவர்களின்
    சந்ததிகளும் இருக்காது. என்பது நிச்சயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. காவிரி என்றுமே இதுவரை ஏக்கப்பெருமூச்சியையே பதிலாக/பரிசாக தந்திருக்கிறது பல காலங்களில் - நமக்கும் அந்த நங்கைக்கும். நிலைமாறும் உலகில் இதுவும் மாறும் என்ற நம்பிக்கையில்....


    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. //கரைபுரண்டோடிய காவிரி ஆறு -நீரின்றிக்
    காய்கின்ற நிலையினைப் பாரு!//

    பார்க்கவே வருத்தமாகத்தான் உள்ளது.

    //புதுப்புனல் பொங்கும் நாள் வருமோடி?
    எங்கும் மகிழ்வினைத் தான் தருமோடி?//

    அவ்வப்போது ஆண்டுக்கு ஒருமுறையாவது வருகிறது ....
    எப்போதாவது மகிழ்வினைத் தருகிறது.

    மலைக்கோட்டைப்படமும் பாடலும் கருத்தும் கச்சிதம்.

    பதிலளிநீக்கு
  4. வருங்கால சந்ததியினருக்கு காசு, நகை, சொத்து, கல்வி மட்டும் கொடுத்திட்டா போதும்ன்னு நினைக்குறோம். கனிம வளமும், நல்லொழுக்கமும் கூட முக்கியம்ன்னு நாம யாரும் உணரவில்லை.

    பதிலளிநீக்கு
  5. மனைவிலை அறிவார்! மணல்விலை அறிவார்!இயற்கை வளங்களை அழித்திடத் துணிவார்// ரசித்தேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  6. மிக மிக அற்புதம்
    அந்தப் பாடலின் ராகத்திலேயே
    பாடி மிக ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. அதே மெட்டில் பாடிப் பார்த்தேன்... அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  8. வணக்கம்
    ஐயா

    ரசிக்கவைக்கும் வரிகள் அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் ஐயா
    தங்களுக்கான கட்டுரைப் போட்டிக்கான பரிசுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையிட இதோ முகவரி
    http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/06/blog-post.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா! பரிசு கிடைத்ததும் தகவல் தெரிவிக்கிறேன்! நன்றி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  10. ஒவ்வொரு முறை காவிரியைக் கடக்கும்போதும் மனதில் அப்படி ஒரு சோகம். அதனால் காவிரி பக்கம் பார்ப்பதே இல்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே !

      நீக்கு
  11. காவிரிக்கு இந்நிலையா வரவேண்டும்
    கவிதை அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே !

      நீக்கு
  12. பொன்னி நதி வரலாற்று சிறப்பு மிக்கது.நிச்சயம் மாற்றம் உண்டு.புது புனல் பொங்கும் நாள் வரு(மோடி?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே !

      நீக்கு
  13. மனைவிலை அறிவார்! மணல்விலை அறிவார்!
    இயற்கை வளங்களை அழித்திடத் துணிவார் = வேதனை.

    பதிலளிநீக்கு
  14. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு