செவ்வாய், 23 செப்டம்பர், 2014

துவளாமல் துணிந்து செல்!-காரஞ்சன்(சேஷ்)


        












ஒவ்வொருவருக்குள்ளும்
ஒளிந்திருக்கும் ஒரு திறமை!
உன்னை நீ அறிந்தால்
உயர்வது நிச்சயமே!

தன் திறனைக் கண்டறிந்து
தருணத்தே வெளிப்படுத்த
உயர்வொடு பெரும்புகழும்
உண்டாகும் உலகினிலே!

குறையிலா மனிதர்கள்
குவலயத்தில் யாருமில்லை!
நிறைகளைக் காண்பவர்கள்
நிச்சயம் உயர்ந்தவர்தாம்!

உயர்வினைப் பெற்றிடவே
ஊக்குவித்தல் அவசியமே!
உறவொடு நட்பிற்கும்
உண்டதிலே பெரும்பங்கு!

நண்பர்களாய் நாமிருப்போம்!
நட்பினை வளர்த்திடுவோம்!
நல்லதோர் நட்பிற்கு

நானிலத்தில் மறைவில்லை!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி