ஞாயிறு, 23 நவம்பர், 2014

வழி காண்போம்!- காரஞ்சன்(சேஷ்)

அழுக்கைக் களைந்தநீர்
ஆனதே சாக்கடையாய்!
சாக்கடையின் தேக்கநிலை
போக்குகின்றார் குழியிறங்கி!
இழித்தவரைப் பழிப்பவர்தம்
அழுக்கடைந்த மனக்கழிவை
வழித்துத் துடைத்தெறிய
வழிகாண்போம் மானிடரே!
-                                                    -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

"நம் உரத்த சிந்தனை" இதழுக்கு "ஒளிப்படக் கவிதை" போட்டிக்காக எழுதிய கவிதை!

ஞாயிறு, 16 நவம்பர், 2014

கவிதைப்போட்டியில் என் மனைவிக்கு மூன்றாம் பரிசு! -காரஞ்சன் (சேஷ்)

ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து தீபாவளித் திருநாளை ஒட்டி நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்(2014 ) வெளியாகி உள்ளன. இதில் என் மனைவிக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! 

என் மனைவியின் கவிதைகள் இதோ:

ஓவியக் கவிதை:

வண்ண மலர்ச்சரத்தை 
வாடுமுன்னே சூட்டிவிடு!
புத்தாடை உடுத்தி
புன்முறுவல் பூத்து
மன்னவன் பார்த்திடவே
மலர்ந்திங்கு நின்றாயோ?

ஓவியமாய் உனைப்பார்த்துக்
காவியங்கள் படைப்பானோ?
பிடியிடையில் மலர்க்கூடை
உடைக்கேற்ற பூச்சரங்கள்!

காந்தக் கண்ணாலே
கவர்ந்தாயோ மன்னவனை!
சார்ந்து நிற்பவளின்
சஞ்சலங்கள் அறியானோ?

கஞ்சிக்குள் உப்பாக
கலந்திட்ட அவன்நினைவால்
வஞ்சியவள் நெஞ்சத்தில்
கொஞ்சமல்ல கற்பனைகள்!

பூத்த புன்னகையும்
பூவிதழ் தேன்சுவையும்
மேவிய காதலினால்
மென்மேலும் வளராதோ?
  
நித்திரையில் முத்திரையாய்
நின்றிருக்கும் மன்னவனே!
வண்ண மலர்ச்சரத்தை
வாடுமுன்னே சூட்டிவிடு!

இரண்டாவது கவிதை:

தழைக்காதோ தாயகமே!

நாட்டின் உயர்வுக்கு
நாளுமொரு திட்டம்!
வீணர்கள் சிலராலே
விழலுக்கு நீராக!

எங்கே பிழை என்று
ஏங்கிநாம் தவிக்கின்றோம்!
தாங்கிவரும் செய்திகளோ
தலைக்குனிவைத் தந்திடுதே!

சிறுமியர்க்குக் கொடுமைகள்!
வறுமையால் தற்கொலைகள்!
கற்பழிப்பு, கொலைகளெலாம்
ஏற்புடைத்தா? எண்ணிடுவோம்!

மதுவுக்கு அடிமையென
மயங்கிக் கிடப்போரின்
குடும்பங்கள் சீரழிந்து
படுந்துயரம் பரிதாபம்!

ஒருதலைக் காதலுக்கு
உடன்படவில்லையெனில்
தெருவழி வரும்போது
திராவகத்தை வீசுவதா?

உள்ளத்தில் தெளிவுடனே
ஒழுக்கமாய் வாழ்ந்திட்டால்
விழுமிய நிலையடைந்து
தழைக்காதோ தாயகமே!-  

-----முனைவர். இரா.எழிலி புதுச்சேரி

போட்டியில் பரிசுபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
போட்டியை அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடித்த திரு.ரூபன் மற்றும் யாழ்பாவாணன் இருவருக்கும் பாராட்டுகள். போட்டி சிறப்பாக நடைபெற உதவிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நடுவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!

-காரஞ்சன் (சேஷ்)

சனி, 8 நவம்பர், 2014

திரு வைகோ அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டி நிறைவுவிழா-பாராட்டுமடல்!-காரஞ்சன்(சேஷ்)

மலைக்கோட்டை நகர்வாழும்
மாமனிதர் பேர்தன்னை
வைகோ என உரைத்து
வலையுலகம் போற்றுதிங்கே!

வையகத்தில் கோவென்பார்!
ஆனால் நீரோ
வலையுலகின் கோவானீர்!
நிலையான புகழென்றும்
நிச்சயம் உமக்குண்டு!

அருட்கண் பார்வையினை
அருளிவிட்டாள் கலைமகளும்!
திறமையுடன் படைக்கின்றீர்
திகட்டாத தெள்ளமுதை!

கண்பட்ட பொருளெல்லாம்
கதைக்கரு ஆவதென்ன?
எண்ணத்தில் வடிவமைத்து
எழுதுகின்றீர் பலகதைகள்!

ஊருணி நீரன்றோ
உம்கையில் கதைக்கருக்கள்!
வெளிவந்த படைப்புகளோ
விளம்பிடுதே உம்திறத்தை!

திட்டமிட்டுச் செயலாற்றி
எட்டுகின்றீர் உம் இலக்கை!
திடமான மனம்கொண்டு
இடர்களுக்கு விடைகொடுத்தீர்!

அறிவித்தீர் போட்டியொன்றை!
அருந்தவப் பயனைடைந்தோம்!
கரும்புதின்னக் கூலியென்றால்
விரும்பாதோர் யாரிருப்பார்?

வெள்ளியெழும்புகையில்
வெளிவருமே ஒருகதையும்!
வியாழன் உறங்குமுன்னே
விமர்சனங்கள் உமையடையும்!

செவ்வாய் மலராதோ? என
செய்திக்குக் காத்திருப்போம்!
வாயார வாழ்த்தியங்கு
வந்திருக்கும் உம்மடலும்!

நடுவர் யாரென்றே
நாமறியா வண்ணம்
கடந்தன சிலவாரம்
காத்திருந்தோம் விடையறிய!

நடுவரின் சிரமத்தை
நாமறிய ஒருபோட்டி!
விதவிதமாய் விமர்சனங்கள்!
விழிபிதுங்கிப் போனோம் நாம்!

திறம்பட செயலாற்றி
தேர்ந்தெடுத்த விமர்சனங்கள்
அறிவித்தது அவர்திறத்தை!
அயராத அவருழைப்பை!
  
விமர்சனம் எதுவென்று
விளக்கிய விதம் அருமை!
அன்னாரின் உழைப்பினையே
நன்றியுடன் போற்றிடுவோம்!

நாற்பது வாரங்கள்
விரைந்து கரைந்துவிட
வெற்றிவிழாக் காணும்
வேளையை நாமடைந்தோம்!

திண்ணியராகித் 
திறம்படச் செயலாற்றி
எண்ணிய எண்ணமெலாம்
ஈடேறக் காணுகின்றீர்!

அறிவித்தீர் பலவிருதை!
அள்ளிவிட்டீர் பரிசுகளை!
பேரறிவாளன் திருவுக்கு
வேறேதும் விளக்கமுண்டோ?
  
தமிழ் வளரத்தொண்டாற்றும்
உமைப்போற்றும் வலையுலகம்!
ஆழிசூழ் இவ்வுலகில்
வாழிய நீர் பல்லாண்டு!

-காரஞ்சன்(சேஷ்)

செவ்வாய், 4 நவம்பர், 2014

திரு வைகோ அவர்களின் சிறுகதைப்போட்டி நிறைவு விழா!-காரஞ்சன் (சேஷ்)

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டி நிறைவு விழா!
வலையுலக சொந்தங்களுக்கு வணக்கம்!

மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றுவிட்டது

நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் நடைபெற்று வரும் இவ்வேளையில் பல்வேறு விருதுகள் வழங்கி, போட்டியில்  பங்கேற்றவர்களை கெளரவித்து பரிசுமழையில்  நனைய வைத்துக் கொண்டுள்ளார்.  

40 வாரங்களில் 39 வாரங்களுக்கான போட்டியில் பங்கேற்று 26 பரிசுகளை வென்றுள்ளேன். 27வது கதை வரை நான் பெற்ற பரிசுகளைத் தனிப் பதிவாக என் வலைப்பூவில் முன்னம் வெளியிட்டிருந்தேன்.

VGK-25 முதல் VGK-40 வரை என்னுடைய விமர்சனங்கள் ஏதாவது ஒரு பரிசுக்குத் தெரிவாகி, தொடர் வெற்றியை ஈட்டித் தந்தன. என் வலைப்பூ நண்பர்களின் பார்வைக்கு நான் பெற்ற பரிசு விவரங்களைப் பணிவுடன் பகிர்ந்துள்ளேன்.

VGK-25 TO VGK-27 பரிசு குறித்த விவரங்களுக்கான என் பதிவு!
--------------------------------------------------------------------------------------------
VGK-28  "வாய்விட்டுச் சிரித்தால்!"- கதைக்கான இணைப்பு!

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

----------------------------------------------------------------------------------------------
VGK 29 - அட்டெண்டர் ஆறுமுகம் - கதைக்கான இணைப்பு

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

------------------------------------------------------------------------------------------------
VGK 30 - மடிசார் புடவை 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

------------------------------------------------------------------------------------------------
VGK 31 - முதிர்ந்த பார்வை 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

-----------------------------------------------------------------------------------------

VGK 32 - கு ம் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

-----------------------------------------------------------------------------------------------

VGK 33 - எல்லோருக்கும் பெய்யும் மழை

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

------------------------------------------------------------------------------------------------
VGK 34 - ஜ் ஜீ ன் னா .... ஜ் ஜி தா ன்

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

------------------------------------------------------------------------------------------------

VGK 35 - பூ பா ன்

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

------------------------------------------------------------------------------------------------

VGK 36 - ’ லிஸபத் டவர்ஸ் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

------------------------------------------------------------------------------------------------

VGK 37 - எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு .... ! 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

----------------------------------------------------------------------------------------------

VGK 38 - மலரே ....... குறிஞ்சி மலரே

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

-----------------------------------------------------------------------------------------------
VGK-39 - மா மி யா ர் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

-----------------------------------------------------------------------------------------------

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி-1 of 4] 

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4] 

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவுப்பகுதி 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட என் விமர்சனத்திற்கான இணைப்பு:

------------------------------------------------------------------------------------------
திரு வைகோ சார் அவர்களைப் பற்றியும், நடுவரைப் பற்றியும், இந்தப் போட்டியைப் பற்றியும் என் கருத்துகளைப் பகிர்ந்த என் கடிதம்:

நேயர் கடிதம் - [ 12 ] - காரஞ்சன் (சேஷ்) திரு. E.S. SESHADRI அவர்கள் 

---------------------------------------------------------------------------------------------
VGK-25 முதல் VGK-40 வரை  தொடர்ச்சியாக ஏதோவொரு பரிசுக்குத்தேர்வாகி வந்துள்ள என்னைக் கெளரவிக்கும் விதமாக என் பெயரில் ஒரு விருதை அறிவித்த திரு வைகோ சார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

அது குறித்த விவரங்கள்! என்பெயரில் அமைந்த விருதில் எனக்கும் ஒரு பரிசு!

VGK-01 முதல் VGK-40  வரையிலான 40 கதைகளில், ஏதாவது 30 க்கு மேல் 39 கதைகள் வரை விமர்சனம் எழுதி  அனுப்பியுள்ளவர்களுக்கு மட்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.. ஒவ்வொருவருக்கும் பரிசுத்தொகை ரூ. 75 [ரூபாய் எழுபத்து ஐந்து ]

சேஷ் விருது” - புதிய சில விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் !
 [ Part-2 of 4 ]  

-----------------------------------------------------------------------------------------------

அதிகமான வெற்றிகளைப் பெற்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களைக் கெளரவிக்கும் வகையில் VGK-01 To VGK-40 ஒட்டுமொத்த வெற்றியாளர்களின் பட்டியலில் 20% .... அதாவது   எட்டு முறைகள்  அல்லது  எட்டு முறைகளுக்கு மேல் பரிசுகளை வென்றுள்ளவர்களுக்கு கீதா விருதுவழங்கப்படுகிறது. அந்த விருதும் மூன்றாம் இடம் பிடித்த எனக்குக் கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------
போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த திரு வைகோ அவர்களின் திறமையும், அயராத உழைப்பும் நம்மையெல்லாம் வியப்படைய வைக்கின்றன.
நடுவர் பணியில் மிகவும் திறம்படச் செயல்புரிந்த மரியாதைக்குரிய ஜீவீ ஐயா அவர்களும் நிச்சயம் மிகவும் பாராட்டப் படவேண்டியவர்.

இருவருக்கும் என் பணிவான வணக்கங்கள்! நெஞ்சார்ந்த நன்றிகள்! வாழிய பல்லாண்டு! வாய்ப்பளித்து, வாசகர்களின் சிந்தனையைத் தூண்டி, பல்வேறு கோணங்களில் விமர்சனம் எழுத வைத்து சாதனை படைத்த இருவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
 
நிறைவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வாசக அன்பர்கள் அனைவரையும் திரு வைகோ சார் அவர்களின் வலைப்பக்கத்திற்கு வருகை தர அழைக்கிறேன்!

நன்றியுடன்

காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!