புதன், 12 செப்டம்பர், 2012

பயணம்! -காரஞ்சன்(சேஷ்)




வாழ்க்கைப் பயணத்தில்
பாதைக்கேற்ப
படிகின்றன மாசுகள்!

அன்றாடப் பயணத்திற்கு
ஆயத்தமாவோம்
அகத்தின் அழுக்ககற்றி!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

31 கருத்துகள்:

  1. அருமை வரிகள்....

    உள்ளத் தூய்மை மிகவும் முக்கியம்...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது! ந்ன்றி!

      நீக்கு


  3. காசுகள் கூட ஆக ஆக
    மாசுகளும் கூட வரும்.
    நேசமாகும் பின்
    நேயத்தை உறிஞ்சிவிடும். நல்
    நித்திரையும் நீங்கிவிடும்.

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா! என்னுடைய வலைப்பூவில் பணம் எனும் தலைப்பில் ஒரு இடுகை உள்ளது! முடிந்தால் படியுங்களேன்!

      http://www.esseshadri.blogspot.in/2011/12/blog-post_09.html
      தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  4. சிறப்பான கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  5. //அன்றாடப் பயணத்திற்கு
    ஆயத்தமாவோம்
    அகத்தின் அழுக்ககற்றி!//

    அருமையான பயணம்.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல சிந்தனை, அருமையான ஹைக்கூ!

    பதிலளிநீக்கு
  7. தூய்மை படுத்தவேண்டியது உள்ளத்தையும் என்பதை மிக சிறப்பாக கூறி இருக்கின்றிர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  8. //அன்றாடப் பயணத்திற்கு
    ஆயத்தமாவோம்
    அகத்தின் அழுக்ககற்றி!//

    அருமையான சிந்தனை...

    பதிலளிநீக்கு
  9. fine friend. but, லாஸ்பேட் airport roadபற்றியும் எழுதவும். ரமணன்

    பதிலளிநீக்கு
  10. நல்ல பாதையில்
    நல்ல வாகனத்தில்
    பயணத்தைத் தொடர்வோம்
    இலக்கை எளிதாய் மட்டுமல்ல
    இன்பமாயும் அடைவோம்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  11. கவிதையின் முதல் பகுதி மட்டுமே போதுமானது.அதுவே பல விஷயங்கள் சொல்கிறது. நன்று நண்பரே!
    பதிவர் சந்திப்பில் -நானும் நானும்

    பதிலளிநீக்கு
  12. தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  13. சிறந்த பயணக்கவிதை அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  14. நான்கு சக்கரம் கொண்ட
    நவீன நானோ கார் போல்
    நன்றாக இருக்கிறது உம்
    கவிதைகள் .பாராட்டுக்கள்
    Pattabi Raman

    பதிலளிநீக்கு
  15. Dear Pavithra your poems are simply superb. Your poetic knowledge is quiet astonishing.Hats off to you for your wonderful knowledge at this very young age. Your appa's translation of your poems adds more beauty to the Blog. Let this healthy competetion continue for ever for people like me to enjoy. Convey my regards to your mom.
    Shyamala.S Ex AGM (A) , PY

    பதிலளிநீக்கு
  16. தங்களின் வருகையும் ஊக்கமளிப்பும் மகிழ்வளிக்கிறது!உங்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு