திங்கள், 15 அக்டோபர், 2012

சங்கீதம்! -காரஞ்சன்(சேஷ்)சங்கீதம்!

தம்மைக் காண்பவரை
தாம்காணாக் கண்களொடு
கம்பீரக் குரலுடனே
கானம் இசைக்கின்றார்!

வாழ்க்கையின் சோகம்
வழிகிறது அவர்பாட்டில்!
இளகிய உள்ளங்கள்
இடுகின்றார் சில்லரைகள்!

கைத்தட்டில் விழும்காசு
கைத்தட்டல் ஒலியாக!
அந்தகனின் செவிகுளிர
அதுதானே சங்கீதம்?


 -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

14 கருத்துகள்:

 1. செவிக்கினிய பாடல் பாடும் அவர்களுக்கு நாம் காணும் காட்சியும் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 2. நிச்சயமாக
  சில்லறைச் சப்தம்தான் அவனுக்கு சங்கீதம்
  அருமையான வித்தியாசமான சிந்தனை
  மனம் தொட்ட கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது! நன்றி ஐயா! "வழிமேல் விழிவைத்து" பகிர்வை படித்திட வேண்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
 4. அந்தகனின் செவிகுளிர
  அதுதானே சங்கீதம்?


  சிங்கார சந்தோஷம் தரும் சங்கீதம் !

  பதிலளிநீக்கு
 5. சங்கீதம், வழி மேல் விழி வைத்து, வாணும் நிலவும் ....
  கவிதைகள் அருமை ...
  தினமும் கவிதைகள் ...
  பார்வைகள் யாவும் கவிதைகளாய் ...
  தொடரட்டும் ....

  பதிலளிநீக்கு
 6. ஆம்.
  வேதனையாக இருக்கிறது. ரயில் பயணத்தில் பார்க்கிறோம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு