வியாழன், 25 அக்டோபர், 2012

சுட்ட ரொட்டி!-காரஞ்சன்(சேஷ்)

                                                    
                                                             சுட்ட ரொட்டி!

அழகு மலரொன்று
அடுப்பருகில் அமர்ந்ததென்ன?
 
வாடாமலர் இங்கு
வாட்டிடுதே ரொட்டிதனை!

சொப்பு விளையாட்டில்
ஒப்புக்குச் சமையலுண்டு!
 
உண்மைச் சமையல்தான்
உந்தன் விளையாட்டோ?

எதிர்பாரா அதிர்வலைகள்
ஏன் உந்தன் கண்களிலே?
 
எரிவாயு விலையேற்றம்
இதற்குள் அறிந்தாயோ?
 
எதிர்காலந்தனை ஏற்று
எதிர்கொள்ளத் துணிந்தாயோ?
                                                  -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:  இணையம்

12 கருத்துகள்:

 1. இந்த புகைப்படத்தினை நானும் பார்த்தேன் சில நாட்கள் முன்!

  பார்த்த உடன் நீங்கள் படைத்திட்டீர் கவிதை... வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. படத்துக்கு பொருத்தமானகவிதை நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 3. படமும் கவிதையும் அருமை சார் .
  முகுந்தன்

  பதிலளிநீக்கு
 4. படத்திற்கேற்ற கவிதை அருமை சார்.

  பதிலளிநீக்கு