சனி, 13 அக்டோபர், 2012

வழிமேல் விழிவைத்து! -காரஞ்சன்(சேஷ்)

                                 
                                                          வழிமேல் விழிவைத்து!


ஆறுகளில் நீருமில்லை!
அதனூடே மீனுமில்லை!
ஏரிகுளம் குட்டையெல்லாம்
இருந்த இடம் தெரியவில்லை!

ஓடுகிற  மீன்களிலே
உறுமீன் வருமெனவே
காத்திருந்த காலமெலாம்
கனவாகிப் போனதிங்கே!

குறுக்குவழி இதுவென்று
கொக்குக்கும் தெரியுமய்யா!
கூடைக்கு ஒருமீனு
கொக்குக்கு மாமூலாய்
எடுத்துக் கொள்வதற்கு
ஏற்றவழி இதுதானே?

                                                      -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு நன்றி : இணையம்

18 கருத்துகள்:

 1. உண்மை,கண்ணீர் தான் உள்ளது மின்சாரம் ,தண்ணீர்,விலைவாசி எல்லாமே கண்ணீரை மட்டுமே வரவைக்கிறது

  பதிலளிநீக்கு
 2. படமும் கருத்தும் அருமை

  புத்தியுள்ள உயிரினம்
  எக்காலத்திலும் எந்த
  சூழ்நிலையும்
  பிழைத்து கொள்ளும்

  மனிதனைப்போல்
  தற்கொலை செய்துகொள்ளாது
  அற்ப காரணங்களை வைத்து

  பதிலளிநீக்கு
 3. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 4. Sir, fine and thank u for this "listerns choice" - ramanans

  பதிலளிநீக்கு