ஞாயிறு, 13 ஜனவரி, 2013

ஓய்வுண்டோ?-காரஞ்சன்(சேஷ்)



                      ஓய்வுண்டோ?


கயிற்றுக் கட்டில்மேல்
கால்மேல் கால்போட்டு
கனவில் ஆழ்ந்தீரோ?
மனக்கணக்கில் ஆழ்ந்தீரோ?

உழைப்பின் மிகுதியால்
உண்டான களைப்போ?
உழவுத் தொழிலின்மேல்
உள்ளத்தில் அலுப்போ?
 
வாயில்லா ஜீவன்களின்
வயிற்றுப் பசிபோக்க
போராடி நெல்விளைத்து- வைக்கோல்
போராக்கி வைத்துவிட்டீர்!
 
உழவே தொழிலென்று
உமைப்போல் பலருண்டு!
சார்ந்து இருப்பதிலும்
சங்கடம் மிகஉண்டு! 
 
இருப்பவர் இத்தொழிலில்
இயந்திரம் புகுத்திவிட்டார்!
இல்லாத உழவரெலாம்
சொல்லொணாத் துயரமுற்றார்! 
 
 வேற்று வேலைசெய்ய
விரும்பிச் செல்பவர்கள்
ஏற்ற கூலிதந்தும்-உழவை
ஏற்க வருவதில்லை! 
 
உழுபவன் கணக்கிட்டால்
உழக்கும் மிஞ்சாது!
உழுபவன் ஓய்ந்துவிட்டால்
உலகே இயங்காது!            

                          -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை!

12 கருத்துகள்:

  1. உழுபவன் கணக்கிட்டால்
    உழக்கும் மிஞ்சாது!
    உழுபவன் ஓய்ந்துவிட்டால்
    உலகே இயங்காது!

    ஆமாங்க உண்மைதான். சரியா சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகை மகிழ்வளித்தது! தங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. உழுபவன் கணக்கிட்டால்
    உழக்கும் மிஞ்சாது!
    உழுபவன் ஓய்ந்துவிட்டால்
    உலகே இயங்காது!

    உன்னத வரிகள்..!

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகை மகிழ்வளித்தது! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. உழுபவன் கணக்கிட்டால்
    உழக்கும் மிஞ்சாது!
    உழுபவன் ஓய்ந்துவிட்டால்
    உலகே இயங்காது! //

    உண்மை உண்மை.

    இந்த கவிதையை வலைச்சரத்தில் படித்தேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கு நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. //உழுபவன் கணக்கிட்டால்
    உழக்கும் மிஞ்சாது!
    உழுபவன் ஓய்ந்துவிட்டால்
    உலகே இயங்காது! //

    உன்னதமான
    உயர்வான
    உண்மையான
    உத்தமமான வரிகள்.

    பதிலளிநீக்கு
  8. படமும் அதற்கான அருமையான
    சிந்தனையுடன் கூடிய கவிதையும் அருமை

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! நன்றி!

      நீக்கு